Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆங் சான் சூ கீ-க்கு வீட்டுக் காவல்:சீனா,ரஷியா-மாறுபட்ட கருத்துகள்.

 மியான்மர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆங் சான் சூ கீ-க்கு ஒன்றரை ஆண்டுகள் வீட்டுக் காவல் தண்டனை விதிக்கப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
      இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலின் அவசர கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆங் சான் சூ கீ-யின் தண்டனைக்காலம் அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 இது தொடர்பாக பிற நாடுகள் தெரிவித்த கருத்துடன் ஐக்கிய நாடுகள் சபையும் தனது எதிர்ப்பை பதிவு செய்தது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க பிரதிநிதி சூசன் ரைஸ் கூறினார்.

  இந்த விஷயத்தில் பிற கவுன்சில் உறுப்பு நாடுகள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்தன. குறிப்பாக சீனா மற்றும் ரஷியா ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கை மிகவும் கடினமான கருத்துகளை உடையதாகத் தெரிவித்தன.

  மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 15 உறுப்பு நாடுகளும் உறுதியாக உள்ளன. இதுவே ஐக்கிய நாடுகள் சபையின் ஒருமித்த கருத்தாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று ரைஸ் குறிப்பிட்டார்.

  வீட்டுக் காவலில் இருந்த ஆங் சான் சூ கீ-யை அவரது வீட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் சென்று சந்தித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

  இதற்காக திங்கள்கிழமை அவரது வீட்டுக் காவல் ஒன்றரை ஆண்டுகள் நீடிக்கப்பட்டது. வீட்டுக்குச் சென்ற அமெரிக்கருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

 

 

Exit mobile version