Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆங் சான் சூச்சி சந்திப்பு இந்தியாவில் : மியான்மாரில்  முஸ்லீம்  இனப்படுகொலை  தொடர்கிறது

டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மியான்மர் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சான் சூகி கலந்துகொண்டு நேரு பற்றி சொற்பொழிவாற்றினார். ஆங் சான் சூச்சி, 67, நேற்று, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். தன் இளமை காலத்தை இந்தியாவில் கழித்த, ஆங்சான் சூச்சி, 40 ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம் இந்தியா வந்தார்.
மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கைப்படியே ஆங் சான் சூகி வாழ்ந்து வருகிறார். அந்த அகிம்சை வழியிலேயே ஜனநாயகத்திற்கு போராடி வரும் ஆங் சான் சூகி, கோடிக்கணக்காண இந்தியர்களின் மனதில் இடம்பிடித்து விட்டார் என்று  புகழாரம்  சூட்டினார்  சோனியா.
சோனியாவின் அழைப்பை ஏற்று, இந்தியா வந்துள்ள சூச்சியை, பிரதமர் பாராட்டினார். ராணுவ ஆட்சி நடக்கும், மியான்மர் நாட்டில், ஜனநாயகத்தை நிலைநிறுத்த பாடுபட்டு வரும் சூச்சியின் செயல்களையும், பிரதமர் பாராட்டினார். பெங்களூரு மற்றும் ஆந்திராவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள சூச்சி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
மியான்மாரில் முஸ்லீம்கள்  இனப்படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும்  போது அது குறித்து  மூச்சுக்கூட  விடாமல்  இந்திய  அதிகாரவர்க்கத்தோடு உலாவர்ம்  சூச்சி குறித்து மன்மோகனும்  சோனியாவும்  பெருமை அடையாலம்  மக்கள்  அல்ல.
மேற்கு  நாடுகளின்  தெற்காசிய உற்பத்தியான் சூச்சி ஜனநாயகத்தின் முன்னுதாரணமல்ல.

Exit mobile version