நாட்டு வளம், காட்டு வளம், கடல் வளம், கனிம வளம் – அனைத்திலும் அந்நிய முதலீடு! இந்நிலையில் இவர்களுக்கு சுதந்திர தினம் ஒரு கேடு!- காலையில் பல் துலக்கும் பேஸ்டிலிருந்து, இரவு ஏற்றி வைக்கும் கொசுவத்தி வரை அனைத்திலும் பன்னாட்டு கம்பெனிகளின் பிடி! ஆனால் கம்பத்தில் பறக்க விடுவதற்கு மட்டும் தேசியகொடி! அது மட்டும் எதற்கு? பேசாமல் அமெரிக்க கொடியை ஏற்றி விடலாமே!
- பன்னாட்டு கம்பெனிகளுக்கு தடையில்லாமல் தண்ணீர், மின்சாரம்… ஆனால் நமக்கில்லை!
- காசில்லாதவனுக்கு கல்வியில்லை! படித்தவனுக்கு வேலையில்லை! இருப்பவனுக்கோ அது உத்திரவாதமில்லை! ஆக மொத்தம் வாழ்வதற்கே வழியில்லை! இதற்கு பெயர் சுதந்திரமா?
- மோடி, லேடி முதல் அனைத்து ஓட்டுப் பொறுக்கிக் கட்சி கேடிகளும் செய்வதெல்லாம் ஃபிராடுதனம், பித்தலாட்டத்தனம்… ஆனால் பேசுவது மட்டும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்!
- நாட்டையே பன்னாட்டு கம்பெனிகளுக்கு கூறுபோட்டு விற்பதற்கு பெயர் சுதந்திரமாம்!
- பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு… மக்களுக்கு! 5 இலட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை – பன்னாட்டு கம்பெனிகளுக்கு! – இதற்குப் பெயர் சமத்துவமாம்!
- மதக்கலவரங்களையும, சாதிக்கலவரங்களையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு பெயர் சகோதரத்துவமாம்! போங்கடா… நீங்களும் உங்க சுதந்திரமும்…
ஆக மொத்தத்தில் இது போலி சுதந்திரம். இதற்கு ஏன் கொண்டாட்டம்? உண்மையான சுதந்திரத்திற்கு தேவை மீண்டுமொரு விடுதலைப் போராட்டம்!
நன்றி வினவு