Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆகக் குறைந்த காலத்தில் அதிகமான மக்களை கொன்று குவித்த ஒரே ஜனாதிபதி!: விக்கிரமாகு

ஆகக் குறைந்த காலப்பகுதியில் கூடுதலான மக்களை கொன்று குவித்த ஒரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். காலி பலப்பிட்டியில் இன்று காலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஏதிர்வரும் காலங்களில் பெருந்தோட்டத்துறை, துறைமுகம், பெற்றோல் உள்ளிட்ட விடங்களில் ஏற்படும் பொருளாதார பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் நோக்கிலேயே ஜெனரல் சரத் பொன்சேகாவை இந்த நாட்டின் ஏகாதிபத்திய வாதிகள் தெரிந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடந்து முடிந்த யுத்தம் இந்தியாவின் வேண்டுகோளின் பேரிலேயே இடம்பெற்றது ஏன்பதை ஜனாதிபதி தாமாக ஒப்புக் கொண்டுள்ளார். ஆறு ஆண்டுகளுக்குப்பின்னர் இடம்பெற வேண்டிய ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே 4 வருடத்திற்குள் நடத்த வேண்டிய தேவை என்ன? இனவாதிகள் மூலம் தாம் கொண்ட வெற்றியை வைத்துக்கொண்டு மீண்டும் குடும்ப அட்சி செய்ய வேண்டும் என்பதே அவரது நோக்கம்.

யுத்தத்தின் மூலம் விடுதலைப்புலிகளிடமிருந்து பெற்ற நிலங்கள் எங்கே? அதனை எல்லாம் இந்தியாவிற்கு தாரை வாத்துக் கொடுத்து விட்டார் மஹிந்த ராஜபக்ஷ என தனதுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Exit mobile version