இந்தியாவில் இன்று சுதந்திரதினம் என்ற அழைக்கப்படும் நிகழ்வு நாடுமுழுவதும் நடத்தப்ப்படுகின்றது. 67 வது தடவை ஆண்டு தோறும் இது கொண்டாடப்படுகிறது. அஸ்ஸாம் மணிப்பூர் போன்ற நாடுகளை இந்திய மத்திய அரசின் கீழ் இணைத்துக்கொண்ட இந்தியா, அதந்த மக்களுக்கு எதிரான தொடர் யுத்தத்தை நடத்திவருகிறது. மணிப்பூர், அஸ்ஸாம் மாநிலங்களில் சுதந்திர தினவிழா கொண்டாடும் இடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலின் மேற்கு மாவட்டத்தில் மொய்ரான்கோம் என்ற இடத்தில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது அங்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்ததாக தகவல் தெரிவிக்கின்றது. சேதம் குறித்து உடனடி தகவல் வெளிவரவில்லை. இதேபோல அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியை அடுத்த ஷிராங் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் நேற்று மாலை குண்டு வெடித்துள்ளது. சேதம் அதிகமில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் போதும் தலைநகர் இம்பாலில் 3 இடங்களிலும், குண்டுத் தாக்குதல் நடைபெற்றது.