ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஸ்ரபின் திடீர் மரணத்தின்பின் தலைமைத்துவத்தை மிக சூழ்ச்சியாக ரவுப் ஹக்கீம் கைப்பற்றியதாக தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முகம்மட் முசம்மில் தெரிவித்தார்.
அஸ்ரபின் மரணத்திலும் ரவுப் ஹக்கீம் தலைமைத்துவத்தை கைபற்றியதிலும் சந்தேகம் உள்ளதென அவர் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
இலங்கை அரசின் நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப்ஹக்கீம் அஷ்ரப்பின் கொலையின் பின்னணியில் செயற்பட்டதாக இலங்கை அரசியல் வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது.