Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அவுஸ்திரேலிய தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்ப நீதிமன்றம் தடை

அவுஸ்திரேலியா நோக்கிச் செல்லும் அகதிகள்

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள 153 அகதிகள் தொடர்பான வழக்கில், தங்களின் எதிர் மனுக்களை தாக்கல் செய்ய, அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு மேல் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. மெல்பேர்ன் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது இதன் போது அரச சட்டத்தரணிகளுக்கு எதிர்வரும் 21ம் திகதி இது தொடர்பில் அறிக்கை மன்றிற்கு சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் போது தங்களின் எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்ய எதிர்வரும் 22 வரையில் அவகாசம் வழங்குமாறு அரசாங்க தரப்பு சட்டத்தரணிகள் கோரினர் எனினும் இதனை நிராகரித்த நீதிபதி எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட் கிழமை குறித்த மனுக்களை தாக்கல் செய்யுமாறு உததரவிட்டார். இதேவேளை முன்னறிவிப்பின்றி நாடுகடத்தும் எண்ணம் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு இல்லை என்றும் அரசாங்கத் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வைத்து உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

படகுகளை நிறுத்துவோம் என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு இந்த நிகழ்வுகள் ஆதரவுப் பிரச்சாரமாகின்றன. அவுஸ்திரேலிய அரசு தனது பிரச்சாரத்திற்காக அகதிகளைப் பந்தாடிவருகிறது. மக்கள் மீது பற்றற்ற கோரமான வியாபாரிகளின் கூட்டமான அவுஸ்திரேலிஅ அதிகாரவர்க்கம் உலகம் முழுவதும் கனிம அகழ்வு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது. பல்தேசிய வியாபார நிறுவனங்களின் கொள்ளையால் பாதிக்கப்படும் அவுஸ்திரேலிய மக்களை நிறவெறி மற்றும் வெளிநாட்டவர் எதிர்ப்பு போன்ற நச்சுக் கலவையால் ஒடுக்கிவைத்திருக்கும் அவுஸ்திரேலிய அரசிற்கு இலங்கை அகதிகள் வெறும் வியாபாரப் பொருட்களே.

Exit mobile version