அவுஸ்திரேலியாவிற்கு அரசியல் தஞ்சம் கோரிச்செல்லும் அகதிகளை அந்த நாடு மிருகத்தனமாக நடத்தி வருகிறது. தமிழ் நாட்டு அரசைப் போன்று அகதிகளை அடிமைகள் போல கண்காணத பிரதேசங்களில் அடிப்படை வசதிகளின்றித் தடுத்துவைத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளைகளில் பெரும்பாலும் அனைவரும் நோய்வாய்ப்பட்டவர்களாக மற்றும் மன அழுத்தம் உள்ளவர்களாக காணப்படுகிறார்கள். அவர்களில் பலர் படுக்கையை நனைக்கிறார்கள். சிலருக்கு பேச்சாற்றல் பாதிக்கப்பட்டுள்ளதென அவர் கூறினார்.
கிறிஸ்மஸ் தீவில், 174 பிள்ளைகள் அடங்கலாக 1,102 புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளனர். தமது கடந்த மூன்று நாட்களில் நூற்றுக்கணக்கானவர்களை பேட்டி கண்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி தெரிவித்தார்