ஒடுக்கப்பட்டவர்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட்டு ஜனநாயகத்தைக் காப்பாற்றிவிடுவார்கள் என அஞ்சிய நாசகார சக்திகளும் சர்வதேச அகிலங்களை உருவாக்கிக் கொண்டன.
பில்ட்டர்பேர்க் குழுமமும் அவ்வாறானவற்றுள் ஒன்று தான். ரேல்ப் பூச்சென் என்ற சிறிய அவுஸ்திரிய நாட்டின் கிராமம் ஒன்றிலுள்ள நட்சத்திர விடுதியில் உலகின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு உலகின் ஆள்பவர்கள் சந்தித் கொண்டார்கள். அவர்கள் பில்டர்பேர்க் குழுமத்தைச் சார்ந்தவர்கள்.
இலங்கையில் எப்படி மக்களை அழிப்பது, இந்தியாவில் இனவாதிகளை உருவாக்கி இலங்கையில் அழிவுகளை எப்படித் தொடர்வது போன்ற சின்னச்சின்ன விடையங்களிலிருந்து உலகை எப்படி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது போன்ற சர்வதேச அரசியல் பிரச்சனைகளை ஆராய்வது என்பது வரை பில்டர்பேர்க் தீர்மானிக்கும்.
ஐரோப்பிய வெள்ளை இனத்தைச் சேர்ந்த பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் மட்டுமே பில்டர்பேர்க் குழுமத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். உலகின் செல்வாக்குமிக்க பெரும் புள்ளிகள் இந்தவருடம் ஒஸ்திரியாவில் ஒன்று கூடினார்கள்.
பில்டர்பேர்க் 2015 இல் மேற்கொள்ளப்படும் முக்கிய தீர்மானங்களின் அடிப்படையிலேயே உலகத்தில் அழிவுகள் நடத்தப்படும். இஸ்லாமிய அடிப்படைவாதிகள், இந்து அடிப்படைவாதிகள், இன அடிப்படைவாதிகள் போன்ற சமூகவிரோத அரசியல் கூறுகள் பில்டர்பேர்க் குழுமத்திற்கு மகிழ்ச்சி தருபவையே.
பில்டர்பேர்க் 2014 பிரித்தானியாவில் நடைபெற்றது. பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர் கூட்டத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. கூட்டம் நடைபெறும் பிரதேசங்கள் முழுவதும் பாதுகாப்பு வலையமாக்கப்படும். உலகத்தின் சாமானிய மனிதனிடமுள்ள சிறிய தொகைப் பணத்தைக் கூட தமது கட்டுப்பாட்டுக்கு உட்படுத்த வேண்டும் என்ற திட்டம் இம் முறை பில்டர் பேர்க் குழுமத்தின் பிரதான ஆய்வாக இருக்கும் என கருதப்படுகின்றது.
இதனால் பணப்பரிமாற்றத்துடன் தொடர்புடைய பில்லியனேர்கள் பலருக்குப் பிரதான இடம் வழங்கப்பட்டுள்ளது. பேய்பால் நிறுவனத்தின் தலைவர் பீட்டர் தியெல், கூகிள் நிறுவனத்தின் தலைவர் எரிக் ஷிமித் போன்றோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தவிர அமெரிக்கவிலிருந்து ஹென்றி கெசிங்சர், முன்னை நாள் சீ.ஐ.ஏ இயக்குனர் டேவிட் பெற்ரயோஸ், நெதர்லாந்து இளவரசரி பெயரிக்ஸ், அவுஸ்திரேலிய ஜனாதிபதி, ஜேர்மனியப் பாதுகாப்பு அமைச்சர், பெல்ஜியன் பிரதமர், பிரித்தானிய சான்சிலர் ஜோர்ஜ் ஒஸ்போர்ண் போன்றவர்கள் முக்கிய புள்ளிகள்.
உலகில் பணப் புழக்க்கத்தைக் கட்டுப்படுத்தி வங்கிகள் ஊடாக மட்டுமே அதனை நடத்துவதன் ஊடக, பணப் பரிமாற்றத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்துவது இவர்களின் நோக்கங்களில் ஒன்று. உக்ரேயினிய நிறவாதப் பாசிஸ்டுகளுக்கு நிதி வழங்கி அழிவை ஏற்படுத்துவது மற்றொரு நோக்கம். ஆசியாவை தமது கட்டளைக்கு உட்படுத்துவது தொடர்பான திட்டங்களை ஆராய்வது நிகழ்ச்சி நிரல்களில் ஒன்று.
உலகைக் கட்டுபடுத்தும் வலிமைகொண்ட 140 பேர் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து கலந்துகொள்கின்றனர். 11ம் திகதி ஜூன் ஆரம்பித்து 14ம் திகதியுடன் முடிவடைந்த பில்டர்பேர்க் கூட்டத்தின் எல்லைகளில் அவுஸ்திரியப் பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தினர். மாபியாக்களின் சந்திப்பு என்ற முழக்கத்துடன் நடத்தப்பட்ட போராட்டங்களை ஒடுக்குவதற்குப் போலிஸ் அனுப்பிவைக்கப்பட்டது.
இவை அனைத்தையும் கடந்து உலகில் ஒடுக்கப்படும் மக்கள் நம்பிக்கையுடன் போராடிவருகின்றனர்.
உலகம் முழுவதும் திட்டமிட்டு களமிறக்கப்படும் தன்னார்வ நிறுவனங்கள் மக்களின் போராட்டங்களை அழிப்பதற்கான கருவிகளாகப் பயன்படுத்தப்படுவது பில்டர்பேர்க் கூட்டத்தில் வெளிப்பட்டது.
இலங்கையில் ஊழல் குற்றங்களை விசாரணை செய்வதற்காக ரான்ஸ்பெரன்சி இன்டர்நாசனல் என்ற அமைப்பின் இலங்கையைச் சேர்ந்த ஆளுனர் ஜே.சீ.வெலியமுன என்பவர் நியமிக்கப்பட்டார். வெலியமுனவே ஊழலில் ஈடுபட்டதாகப் பின்னதாகத் தகவல்கள் வெளியாகின.
ஊடகவியலாளர்கள் கூட அனுமதிக்கப்படாத இரகசிய பில்டர்பேர்க் கூட்டம் வெளிப்படையானது என நிறுவும் நோக்கில் அதற்கு ரான்ச்பெரன்சி இன்டர்னாஷனல் அமைப்பின் அமெரிக்கப் பிரதிநிதி ஜெசிக்கா மத்தியூ அழைக்கப்பட்டிருந்தார்.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற அரசுகளின் நிதியில் ஜேர்மனியைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் ரான்ஸ்பெரன்சி இன்டர்நாஷனல் என்ற அமைப்பு உலகில் ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு பல்தேசிய நிறுவனங்களின் சூறையாடலுக்கு வசதியேற்படுத்தும் நிறுவனங்களில் ஒன்றாகும்.
உலகில் ஒடுக்கப்படும் மக்களின் பலத்தின் முன்னால் காகிதப் புலிகளான இவர்களின் அழிவு தவிர்க்க முடியாத ஒன்று.