அவுஸ்திரேலியக் கடல் பரப்பில் இலங்கைக் கடற்படையிடம் அவுஸ்திரேலியக் கடற்படை
முதலில் அவுஸ்திரேலிய சுங்கப்பிரிவுக் கப்பலில் ஏற்றப்பட்ட அகதிகள் பின்னதாக இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.
இதேஎவேளை அவுஸ்திரேலிய மனித உரிமைகள் நிறுவனம் சர்வதேசச் சட்டங்களுக்கு முரணாக அகதிகள் ஒப்படைக்கப்படுகின்றனர் என்கிறது. ஐ.நா தனது கவலையைத் தெரிவித்ததுடன் சர்வதேசச் சட்டங்களை மீறியதாகக் குற்றம் சுமத்துகிறது.
தவிர அவுஸ்திரேலிய பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகளும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் விரும்பியிருந்தால் அகதிகளைப் பொறுப்பேற்றிருக்கலாம். புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் நம்பக் கோரும் பல நாடுகள் விரும்பியிருந்தால் அகதிகளை ஏற்றுக்கொண்டிருக்கலாம்.
அறிக்கைவிடுத்து போராட எண்ணும் மக்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இலங்கை அரசுடன் இணைந்து அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதே இவர்களின் நோக்கம்.
அவுஸ்திரேலியாவிற்கு அருகாமையில் இலங்கை இனக்கொலை அரசின் கடற்படையை அழைத்துச் சித்திரவதை செய்வதை இந்த அமைப்புக்கள் கைகட்டி மௌனமாய்ப் பார்த்துக்கொண்டு அறிக்கையை மட்டும் விடுப்பதன் உள்நோக்கம் தெளிவானது.
மக்கள் விழிப்படைந்துவிட்டார்கள் என இவர்களுக்கு அறிவிப்பதற்காகவும் அகதிகள் மீதான அரசுகளின் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தட்டிக் கேட்பதற்காகவும், ஐக்கிய நாடுகள் சபையிடம் அகதிகளைப் பாதுகாக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு பதில் கேட்பதற்காகவும் 07.07.2014 அன்று தமிழ் அகதிகளுக்கான போராட்டக்குழு, அருகருகே அமைந்துள்ள அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய நாடுகள் முகவர் நிலையம் முன்றலில் ஆர்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. அவுஸ்திரேலிய அகதிகளின் நிலை ஏனைய புலம்பெயர் தமிழர்களுக்கும் ஏற்படலாம்.