Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அவலத்துள் வாழும் மக்களை மந்தைகளாக்கிய விக்கியும் இந்திய அரசும்

cvwikiதேர்தலுக்கு முன்பதாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தேர்தலுக்கும் இந்திய அரசுக்கும் எந்தத் தொடர்ப்பும் இல்லை என ஊடகங்களில் அறிக்கைக்கு மேல் அறிக்கை வெளியிட்டார். அதே வேளை இந்தியத் துணைத்தூதர் ‘வடக்கு மாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டதில் இந்தியாவிற்கு எந்தத் தொடர்பும் கிடையாது’ என்று தேர்தலின் முன்பதகக் கூறியிருந்தார்.

இவை அனைத்தும் முடிந்த பின்னர்  விக்னேஸ்வரன் ‘வட மாகாணசபைத் தேர்தலில் இந்தியா மிக முக்கியமான பங்காற்றியுள்ளதாக கூறியுள்ளார்’. விக்னேஸ்வரன் அப்பட்டமான பொய்யை மக்களுக்குக் கூறி வாக்குப் பொறுக்கியுள்ளார். அதே வேளை இந்திய மேலாதிக்க அரசு, தமிழ்ப் பேசும் மக்களின் நலன்களுக்கு எதிராக இலங்கையில் தலையிட்டும் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என அறிவித்திருக்கின்றது.

அவலத்துள் வாழும் மக்கள் கூட்டத்தை மந்தைகளாக்கிய விக்னேஸ்வரனும் இந்திய அரசும் தமது சொந்த நலன்களுக்காக தாம் விரும்பியதையெல்லாம் செய்யத் தயார் நிலையில் உள்ளதை இது எடுத்துக்காட்டுகின்றது.

Exit mobile version