Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அவதூறு வழக்கில் ஜெயதேவன் வெற்றி, ஐ.பி.சி கைமாறியது:தொடரும் வர்த்தக வெறி

ஜெயதேவன்-சக்திவடிவேல்
ஜெயதேவன்-சக்திவடிவேல்

சிறீலங்கா கார்டியன் என்ற ஊடகத்தை நடத்திவருபவரான இங்கிலாந்தில் வசிக்கும் ஜெயதேவன் தொடுத்த அவதூறு வழக்கில் ஐ.பி.சி வானொலி 85,000 ஸ்டேலிங் பவுண்டுகளை நஷ்ட ஈடாக ஜெயதேவனுக்கு வழங்கவேண்டும் என்று, பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் பெப்ரவரி 3இல் ஐபிசி வானொலி லண்டன் ரமிழ் மீடியா என்ற நிறுவனத்துக்கு உரிமையாக்கப்படுள்ளது.

லண்டன் ரமிழ் மீடியாவின் இயக்குநராக பரமசாமி பிரபாகரன் உள்ளார். பரா பிரபா என ஒலிபரப்பு நிகழ்ச்சிகளில் பொதுவாக அறியப்பட்ட இவர் ஐ.பி.சி வானொலியைக் கையகப்படுத்தியதன் பின்புலத்தில் லண்டனை மையமாகக்கொண்ட தொலை பேசி நிறுவனம் ஒன்று செயற்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட பிழவுகளில் ஐ.பி.சி உம் பிளவுண்டு ஐ.எல்.சி என்ற ஒலிபரப்பு ஊடகம் உருவானது. ஐ.எல்.சி புலிகளின் தொடர்ச்சியாகப் பிரகடனப்படுத்திக்கொள்ள ஐ,பி.சி வர்த்தக விளம்பரங்களற்றுச் செயலிழந்து போனது. ஐ.பி.சி ஐ லண்டனில் வசிக்கும் ரியல் எஸ்டேட் வியாபாரியான சுப்பிரமணியம் சக்திவடிவேல் என்பவரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இவரின் உரிமையிலுள்ள ஐ,பி,சி ஊடகமே இன்று ஜெயதேவனுகுப் பணம் செலுத்தும் நிலைக்கு வந்தடந்துள்ளது.

ஈழத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் அவலங்கள் இந்தியாவிலும் புலம் பெயர் நாடுகளிலும் வியாபாரமாக மாற்றப்பட்டது. புலிகளின் அழிவின் பின்னர் பல மில்லியன்கள் தனி நபர்களின் வியாபார முதலீடாக மாற்றப்பட்டது. மறுபுறத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான தொலைபேசி வர்தக நிறுவனங்களான லிபாரா, லைக்கா போன்றவை ஈழ மக்களின் அவலத்தைத் தமது வர்த்தக முதலீடாக மாற்ற முனைகின்றன.

லிபாரா நிறுவனம் 10 பவுண்சிற்கு தொலைபேச பணம் செலுத்தினால் ஒரு பவுண்சை அகதிகளுக்கு வழங்குவோம் என்ற உணர்ச்சி வியாபாரத்தை ஆரம்பித்தது. லைக்கா இலங்கை அரசாங்கத்துடனும் ராஜபக்ச அரசுடனும் தொடர்பு வைத்துள்ளதாகவும், பொதுநலவாய நாடுகளின் செலவுகளுக்குப் பணம் வழங்கியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஏகாதிபத்தியங்களுக்கும் பல்தேசியக் கொள்ளைக்கும் எதிரன தேசியவிடுதலைப் போராட்டம் இன்று பல்தேசிய வர்த்தக வெறியர்களின் பிடியில் சிக்கியுள்ளது. புலம்பெயர் நாடுகளிலுள்ல அமைப்புக்கள் பல இந்த வியாபார வெறிக்கு தேசிய முலாம் பூசுவதற்காக மட்டுமே செயற்பட்டுவருகின்றன.

Exit mobile version