Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அவசரமாக குடியுரிமைத் தடை நீக்கப்பட்ட பின்னர் இலங்கைக்கு வந்த பிரேம்குமார்

kumar_inioruமகிந்த ராஜபக்சவிற்கு எதிராக மைத்திரிபால சிரிசேனவை மேற்கு ஏகாதிபத்தியங்கள் ஆட்சியதிகாரத்திற்குக் கொண்டுவர முற்படுகின்றனர். முதலாளித்துவ ஆட்சியமைப்பில் நம்பிக்கை இழந்த மக்கள் மத்தியில் இடதுசாரித் திரிபுவாதிகளை ஏகாதிபத்திய நாடுகள் களமிறக்க முற்படுகின்றன. இந்த வகையில் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமை என்ற அடிப்படை ஜனநாயகத்தைக் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கும் முன்னிலை சோசலிசக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் கடைவிரித்துத் தமது திரிபு வாதத்தை விற்பனை செய்ய முயற்சிக்கிறது.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்குத் தீர்வு வழங்குவோம் எனக் கூறும் இக்கட்சி தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமையை நிராகரித்து பேரினவாதிகள் அணியிலிருந்து இடதுசாரியம் பேசுகிறது.

பிரிந்து செல்லும் உரிமை என்பது பிரிவினை அல்ல, என்பதையும் அது தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமை என்பதும் மார்க்சிய லெனினியக் கோட்பாடு. இதனை நிராகரிக்கும் ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி என்பன இன்று இடதுசாரியம் என்ற பெயரில் மக்கள் மத்தியில் தவறான பிரச்சாரத்தை மேற்கொள்கின்றன.

முதலாளித்துவ அமைப்பு முறையில் வெறுப்படைந்துவரும் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் இடதுசாரிகள் மீது வெறுப்பை ஏற்படுத்துவதற்கும், சிங்கள மக்கள் மத்தியில் இடதுசாரி அரசியலை இனவாதமாக மாற்றுவதற்கும் ஏகாதிபத்தியங்கள் இவ்வாறான திரிபுவாதிகளைக் களமிறக்குவது வழமையானது.

சிங்கள மக்கள் மத்தியிலிருந்து பிரிந்து செல்லும் உரிமைக்கான முழக்கங்கள் தோன்றுமானால் தமிழ்ப் பேசும் மக்கள் இணைந்து வாழவே விரும்பும் நிலை தோன்றும். ஆக, பிரிவினையைத் தூண்டுவது பாசிசப் பேரினவாத அரசுகள் மட்டுமல்ல இடது சாரிக் கட்சிகள் என்ற பெயரில் அரசியல் நடத்தும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்றனவுமே.

இலங்கையில் தாம் ஆட்சிக்கு வந்தால் தாம் தமிழர்களுக்குச் சுயாட்சி வழங்குவோம் எனக் கூறும் இக்கட்சியின் தலைவர் பிரேமகுமார் குணரத்தினம் ஜே.வி.பி இன் உள்ளேயே கடும்போக்கு பேரினவாதிகாகச் சித்தரிக்கப்பட்டவர்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் புதிய ஆட்சியின் கீழ் எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமே தவிர, நிரந்தர தீர்வுகள் கிடைக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால ஆட்சிக்க்வந்தால் தற்காலிக தீர்வு கிடைக்கும் என்பதே மற்றொரு பக்கத் திரிபுவாதம். ஒரு அனுமானத்தில் தற்காலிகத் தீர்வு கிடைக்குமென்றால் அத்தீர்வை வைத்துக்கொண்டு மக்களை அணிதிரட்டிப் போராடுவதற்குப் பதிலாக வாக்குப் பொறுக்கும் முன்னிலை சோசலிசக் கட்சியின் நோக்கம் வினோதமானது.

குமார் குணரத்தினம் தனது வேட்பாளருக்காக வாக்குப் பொறுக்குவதற்கு மைத்திரியிலிருந்த ஆரம்பிக்க்க வேண்டிய தேவையை உணர்ந்துள்ளார் போலும்.

தவிர, கடந்தவாரம் வரைக்கும் இலங்கையில் இரட்டைக் குடியுரிமை தடைசெய்யப்பட்டிருந்தது. வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் இலங்கையில் அரசியலில் ஈடுபடத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. நான்கு நாட்களுக்கு முன்னதாக தேர்தல் அமளிகளுடன் இரட்டக் குடியுரிமைக்கான தடை நீக்கப்பட்டது. அதற்கான காரணம் பலரால் அறிந்துகொள்ளப்பட முடியாமலிருந்தது. நேற்றைய தினம் ஓஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற குணரத்தினம் இலங்கையில் அரசியலில் ஈடுபட இச்சட்டம் வழிசெய்தது.

Exit mobile version