Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அழைப்பிதழ் : இம்மாத ஒளிரும் விழித்திரையில் தமிழில் V for Vendetta

சமூகத்தில் நிகழும் தவறுகளைத் திருத்தப் போராடும் ஒரு மனிதனின் கதைதான் V for Vendetta. உலகம் போராலும் பட்டினியாலும் நோய்களாலும் மாறிப்போய்விட்டது. அம் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க அரசாங்கமும் பாசிச சர்வாதிகாரமாக மாறுகிறது. அனைத்து வழிகளிலும் மக்களை ஒடுக்கிக் கண்காணிக்கிறது. இதனால் மக்கள் கட்டுப்பாட்டுக்குள் சிக்குகிறார்கள். ஆனால் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் போராடவில்லை. மக்களை எழுச்சியடையச் செய்ய முயலும் ஒரு மனிதனின் போராட்டமே V for Vendetta.

1982இல் வெளிவந்த நாவலின் தழுவலான இப்படம், பிரித்தானியாவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ‘Guy Fawkes Day”யை வரலாற்றுப் பின்புலமாகக் கொண்டது. 1605ம் ஆண்டு நவம்பர் 5ம் திகதி Guy Fawkesம் அவரது நண்பர்களும் பிரித்தானியப் பாராளுமன்றத்தை வெடிவைத்துத் தகர்க்கச் சதித்திட்டமிட்டதற்காகக் கைதுசெய்யப்பட்ட தினமே Guy Fawkes தினமாகும்.

12.07.2014-சனிக்கிளமைமாலை4 மணிக்கு: தேசியகலைஇலகியப்பேரவை, 121, ஹம்டன்ஒழுங்கைவெள்ளவத்தை.

ஒளிரும் விழித்திரை
விழிவழி நுழைவும் திரைவழி உரையும்

Exit mobile version