Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அழிவுகளை ஏற்படுத்திய தன்னார்வ நிறுவனங்களின் பணம் : நோர்வே ஒப்புதல் வாக்குமூலம்

நோர்வே அரசின் பணிப்பின் பேரில் தயாரிக்கப்பட்ட 208 பக்கங்களைக் கொண்ட இலங்கையில் நோர்வே அரசின் பங்கு குறித்த  ‘அமைதிக்கான அடமானங்கள்‘ (Pawns of Peace) என்ற தலைப்பிலான  அறிக்கை, ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது.
பாலஸ்தீனம், பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகளில் விடுதலைப் போராட்டஙகளைச் சீர்குலைப்பதில் நோர்வே பிரதான பங்கு வகித்திருக்கிறது. தன்னார்வ நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பெருந்தொகைப் பணம் போராட்டங்களைச் சீர்குலைப்பதற்கும் அழிவுகளை ஏற்படுத்துவதிலும் ஆரம்பப் புள்ளியாக அமைகிறது. அண்மையில் லிபியாவை ஆக்கிரமிப்பதிலும் இத் தன்னார்வ நிறுவனங்களின் பங்கு பிரதானமானதாக அமைந்திருந்தது. நோர்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தன்னார்வ நிறுவனனங்கள் சீரழிவிற்கு எவ்வாறு பயன்பட்டன என்பது குறித்து ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளது.
1997ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நோர்வே 366 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை சமாதான முனைப்புக்கள் குறித்து நோர்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம், நோர்வே மற்றும் இலங்கை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
நிதி உதவி வழங்கப்பட்ட பெரும்பான்மையான இலங்கை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உரிய முறையில் பணத்தைப் பயன்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவின் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு 60 மில்லியன் நோர்வே நோக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மிலிந்த மொரகொட, ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் நோர்வே சமாதான முனைப்புக்களில் முக்கிய வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட மொரகொட ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை வெளி வளத் திணைக்களத்திற்கு 300000 மில்லியன் நோக்குகளும், இலங்கை அரசாங்கத்திற்கு 70000 மில்லியன் நோக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

Exit mobile version