தன்னை உயர்பதவியில் அமர்த்திய அதிகார வர்க்கத்தின் அடியாள் போல வசந்தி செயற்படுவது அருவருப்பானது(NN).
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் புலம்பெயர் நாடுகளில் தேசிய வியாபாரத்தின் ஒரு பகுதியாக்கப்பட்டுள்ளது. லட்சம் லட்டமாய் இலங்கை அரசின் கோரப்பற்களுக்கு மனிதர்களை பலியாக்க அனுமதித்துவிட்டு ‘உரிமைப்போர உலகமயமாக்கிய முள்ளிவாய்க்கால் வீரம்’ என்று கட்டுரை வரையும் ‘தேசிய அவமானம்’ புலம்பெயர் அரங்கேறுகிறது.
உரிமைப் போரை உளவு நிறுவனங்களிடம் கையளித்த முள்ளிவாய்க்கால் அரசியல் அதே உளவு நிறுவனங்களால் வழிநடத்தப்படும் புலம்பெயர் புலிகள் என்று கூறிக்கொள்பவர்களாலும் அவர்களின் மீள முடியாத அடிமைகளாலும் முன்னெடுக்கப்படுகின்றது.
வசந்தியும் புலம்பெயர் ஐந்தாம் படைகளும் மரணித்தவர்களை மூலதனமாக்கிக்கொள்கிறார்கள்.
யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவ ஒன்றிய தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான துண்டுபிரசுரங்கள் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் ஒட்டப்பட்டிருந்தன. இலங்கை அரச படைகளதும் அவற்றின் துணைப்படைகளதும் கல்விச் சமூகத்தின் மீதான் எச்சரிக்கை இது. உலகின் பல்கலைக் கழகங்களும், மாணவர் அமைப்புக்களும் இதனைக் கண்டு கொதித்தெழுந்திருக்க வேண்டும். புலம் பெயர் நாடுகளில் வீரம் பேசும் கோழைகள் இவர்களை எல்லாம் தொடர்புகொள்வது கூடக் கிடையாது. இலங்கை அரசின் இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட ஏகாதிபத்திய அரசுகளின் விசுவாசிகளான இவர்கள் போராட்டத்தின் மிகப்பெரும் அழிவு சக்திகள்.
தென்னிந்தியாவிலிருந்து சமூக வலைத் தளங்களில் ஈழம் பிடிக்கும் தேசிய வியாபாரிகள் இந்த எச்சரிக்கைக்கு எதிராக பல்கலைக் கழகங்களிடமிருந்து ஒரு துண்டறிக்கை கூட பெற்று வெளியிவில்லை.