பருத்தித்துறை பிரதேசத்தில் வைத்து இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இ;லங்கைக் கடற்படைப் பேச்சாளர் கோசல வர்னகுலசூரிய தெரிவித்துள்ளார்.
வழமை போல தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மோடிக்குக் கடிதம் எழுதும் வேலையை ஆரம்பித்துள்ளார். வடகிழக்குக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் வருகை இலங்கை மீனவர்களின் வளங்களை கேள்விக்குள்ளாக்குவது ஒருபுறமிருக்க இலங்கை அரசு இதனைத் தனது பேரினவாத மற்றும் இராணுவ மயமாக்கும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறது.
இலங்கையைச் சூழவரவுள்ள கடற்பிரதேசத்தை மையமாகக் கொண்டு இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஊடாக அதன் அண்மைய கடற்பகுதி இராணுவமயமாக்கப்படுகிறது.
இனக்கொலையின் சூத்திரதாரி கோத்தாபய ராஜபக்சவின் தலைமையில் இயங்கும் லங்கா லொஜிஸ்டிக், ரக்னலங்கா, அவன்கார்ட் மரிடைம் என்ற மூன்று வேறுபட்ட நிறுவனங்கள் கடற்பிரதேசத்தை இராணுவமயமாகும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளன.
இந்திய இலங்கைக்கு இடைப்பட்ட கடற்பிரதேசத்தில் மன்னார் கடற்பரப்பில் வேதாந்தா என்ற பிரித்தானிய நிறுவனம் எண்ணை அகழ்வு வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இராணுவமயமாக்கலின் பின்புலத்தில் கடல் வளங்களைச் சுரண்டும் நோக்கமும் பொதிந்துள்ளது.
இலங்கை இந்தியக் கடற்பரப்பை உயிராபத்து மிக்க பிரதேசமாக மாற்றி மக்கள் நடமாட்டடமற்ற பிரதேசமாக மாற்றும் நோக்கத்துடன் மீனவர்கள் மீதான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
வேதாந்தாவிற்கு எதிரான போராட்டம் எதிர்வரும் வெள்ளியன்று லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் எண்ணைவளத்திற்காக அப்பாவிகளின் உயிர்பறிக்கும் இந்த நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்திற்குத் தமிழர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Friday 1st August. 14:00-16:00 ,The Lincoln Centre, 18 Lincoln’s Inn Fields, London WC2A 3ED