இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்ட அல்ஜெசீரா ஊடகவியலாளர்களுக்கு விசா வழங்குமாறு குடிவரவு திணைக்களத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இரண்டாம் தவணைக்கான பதவி பிரமாண நிகழ்வுகளில் செய்தி சேகரிப்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், குடிவரவு திணைக்களத்தினால் அவர்களுடைய விசா மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த ஊடகவியலாளர்களில் இலங்கை,இந்தியர்கள் எவரும் உள்ளடங்காத பட்சத்தில் பிரஸ்தாப ஊடகவியலாளர்களுக்கு விசா வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார் ஜனாதிபதி.