Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அல்கொய்தா, தலிபான் தலைவர்கள் பாகிஸ்தானில் என்றால் ஆதாரம் கொடுங்கள் – பாகிஸ்தான்.

காஷ்மீர் பிரச்னையை சேர்க்காவிட்டால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை தொடர இயலாது என்று பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கூறியுள்ளார். வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை இரவு நாடு திரும்பிய அவர் லாகூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இவ்வாறு அவர் தெரிவித்தார். காஷ்மீர் விஷியத்துக்கு இந்தியா முக்கியத்துவம் தரமாலிருந்தால், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதில் பாகிஸ்தானுக்கு இயலாமால் போகலாம் என்றும் அவர் கூறினார். ஜூலை 15-ல் இஸ்லாமபாதில் இந்தியபாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டதையடுத்து குரேஷி இவ்வாறு கூறியது முக்கியத்துவம் பெறுகிறது. பாகிஸ்தான்ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையை உருவாகவுள்ள வர்த்தக உடன்பாடு பற்றி கூறுகையில், இது மிகவும் முக்கயமான சாதனை என்று கூறினார். மேலும், ஆப்கானிஸ்தானுக்கு, பாகிஸ்தான் வழியாக இந்தியா பொருள்களை அனுப்ப வகை செய்யும் அம்சம் எதுவும் இந்த உடன்படிக்கையில் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். ஓசாமா பின் லேடன், முல்லா ஓமர் உட்பட அல்கொய்தா மற்றும் ஆப்கன் தலிபான் தலைவர்கள் பாகிஸ்தானில் இருப்பதாக அமெரிக்க தலைவர்களும், அதிகாரிகளும் கூறுவதை குரேஷி திட்டவட்டமாக மறுத்தார். அப்படி கூறுபவர்கள் பாகிஸ்தான் அரசுக்கு தகுந்த ஆதாரங்களை கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version