Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அல்கய்தாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா தயார் என்பதன் பின்புலம்

விமானப்படை தளபதி அரூப் ராகா
விமானப்படை தளபதி அரூப் ராகா

ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கமான அல்கொய்தாவின் கிளை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்திய துணை கண்டத்தில் அது தன் புனித போரை தொடங்கும் என்றும் சமூக வலைத்தளத்தில் அந்த இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஜவாகிரி பேசிய வீடியோ வெளியானது.

ஒசாமா பின்லாடன் அப்துல்லா அசாம் போன்றவர்களால் அல்கயித அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட வேளையில் அமெரிக்க அரசு பின்னணியில் செயற்பட்டது. அல்கொயிதாவைக் காரணாமக முன்வைத்து அமெரிக்கா தலைமையில் நேட்டோ இராணுவம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது.

உலகின் பல்தேசிய நிறுவானங்களால் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்ட நரேந்திர மோடியின் இந்து பாசிச அரசு இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்து வெறியை முன்வைத்தது.

உலகம் முழுவதும் மதங்களுக்கு இடையேயும், தேசிய இனக் குழுக்களுக்கு இடையேயும், வெவ்வேறு அடையாளங்களுக்கு இடையேயும் மோதலை ஏற்படுத்துவது பல்தேசிய வியாபார நிறுவனங்களின் கொள்ளைக்கு பக்கபலமாக அமைகிறது. இவ்வாறான மோதல்களை மக்களின் சிந்தனை திசைதிருப்பப்பட சந்தடி இல்லாமல் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் கொள்ளையடித்துச் செல்கின்றன. இக் கொள்ளைக்கு எதிரான போராட்டங்கள் மக்களின் கவனத்திலிருந்து திசை திருப்பட்டு அடையாளக் குழுக்களுக்கு இடையேயான மோதல்கள் முன்னணிக்கு வருகின்றன.

இந்தியாவில் அல்கொய்தாவின் கிளை என்ற பரபரப்பின் பின்புலத்தில் இந்திய அமெரிக்க அரசுகள் இணைந்த பல்தேசிய நிறுவனங்களின் சதி காணப்பட வாய்ப்புக்கள் உண்டு.

இஸ்லாமியர்களின் எதிரியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சித்தரிக்க அல்கொய்தா விரும்புவதாக அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ முன்னாள் ஆய்வாளர் வேறு கருத்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் காலூன்ற நினைக்கும் அல்கொய்தா, முஸ்லீம்களின் எதிரியாக நரேந்திர மோடியை சித்தரிக்க விரும்புவதாக அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ முன்னாள் ஆய்வாளர் தெரிவித்தார். மேலும் அல்கொய்தாவின் மிரட்டலை இந்தியா மிகவும் தீவிரமாக கையாள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வாளருக்கு மோடியின் நாசிக் கருத்துகள் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.

இந்திய மக்களின் கவனத்தை வேறு திசைக்கு மாற்றுவதே இவ்வாறான கருத்துக்களின் அடிப்படை நோக்கம். மோடியை ஆட்யிலேற்றிய பல்தேசிய வியாபாரப் பெரு நிறுவனங்களும் அவற்றின் ஊதுகுழல் ஊடகங்களும் அல்கொயிதா பற்றி பரபரப்புச் செய்திகள் வெளியிட ஆரம்பித்துவிட்டன.

இனிமேல் சில குண்டுவெடிப்புக்களையும் கொலைகளையும் நிகழ்த்த முன்பு இந்திய அரசு தனது பங்கிற்கான பரபரப்பை ஏற்படுத்த வேண்டும். அதன் ஒரு பகுதியாக அல்கய்தாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாடு தயாராக உள்ளதென விமானப்படை தளபதி அரூப் ராகா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் விமானப்படை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த அரூப் ராகா, அல்கய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்கிறது என தெரிவித்தார்.

Exit mobile version