Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அலுத்கமவில் இராணுவ முகாம் அமைக்க மக்கள் கோருவதாக இராணுவப் பயங்கரவாதிகள் பொய்

பொது பல சேனாவின் நிகழ்வில் கோத்தாபய
பொது பல சேனாவின் நிகழ்வில் கோத்தாபய

அலுத்கம முஸ்லிம் மக்கள் இராணுவ முகாம் ஒன்றை கோரி வருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது. மக்களின் கோரிக்கைக்கு அமைவாக தற்காலிக அடிப்படையில் அலுத்கம பிரதேசத்தில் இராணுவ முகாமொன்றை அமைக்க உள்ளதாக இராணுவ ஊடகப் பணிப்பாளர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
சிறுபான்மைத் தேசிய இனங்கள் வாழும் பகுதிகளில் இராணுவ முகாம்கள் அழிக்கும் நோக்கில் அமைக்கப்படுகின்றன.

அலுத்கமவில் முஸ்லிம் தமிழர்கள் இராணுவ முகாம் அமைக்கக்கோரவில்லைல். அரசபடைகள் பொதுபல சேனாவுடன் இணைந்து நடத்திய அழிப்பு நடவடிக்கையின் பின்னர் மக்கள் அரச படைகளைக் காவலுக்கு அழைக்க மாட்டார்கள் என்பது வெளிப்படை. அலுத்கம முஸ்லீம்கள் இராணுவத்தின் இந்த நோக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தவும், தம்மை அணிதிரட்டி தற்காப்பு யுத்ததிற்குத் தயாராகவும் வேண்டும்.

நடத்துவதையும், தற்காப்பு யுத்ததிற்குத் தயார் செய்வதையும் தவிர மக்களுக்கு வேறு வழிகள் இல்லை. கோத்தாபய ராஜபக்சவின் பௌத்த குண்டர்கள் படையான பொது பல சேனா இராணுவ மயமாக்கலுக்கான கருவியாகவும் பயன்படுகிறது.

Exit mobile version