
பிரிவினைக்கு எதிராக நூறுவீதமான ஊடகங்களின் ஆதரவு, அரசியல்வாதிகளின் மிரட்டல்கள், இங்கிலாந்து அரசியல்வாதிகளின் முழுநேரப் பிரச்சாரம் ஆகியவற்றைக் கடந்து ஸ்கொட்லாந்தில் 48 வீதமான மக்கள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என இதுவரை வெளியான கணிப்புக்கள் கூறுகின்றன. ஸ்கொட்லாந்து பிரித்தானியாவுடன் இணைந்திருப்பதற்கு ஆதரவாக 52 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர். அண்ணளவாக அரைவாசியை அண்மித்த ஸ்கொட்லாந்து மக்களின் எதிர்ப்புடன் அந்த நாடு பிரித்தானியாவுடன் இணைந்திருக்கும். பிரிந்து செல்கிறதா இல்லையா என்பதற்கு அப்பால் பிரிவினைக்கான குரல் மக்களின் குரலாக ஒலிக்க ஆரம்பித்துள்ளது என்பதே இதன் உட்பொருள். இங்கிலாந்து மக்களை மட்டுமல்ல உலக மக்களைச் சுரண்டிக்கொழுக்கும் பிரித்தானிய அதிகாரவர்க்கம், ஸ்கொட்லாந்து மக்களை மூன்று நூற்றாண்டுகளாகச் சுரண்டிவருகிறது. எது எவ்வாறாயினும், முழு அதிகாரவர்க்கத்தினதும் மிரட்டல்களுக்கு மத்தியில் ஸ்கொட்லாந்து மக்களின் பிரிவினைக்கு ஆதரவான வாக்கு அவர்களின் வெற்றியே.