காஷ்மீர் குறித்து அருந்ததி ராய் தெரிவித்த கருத்துகளுக்காகவும், அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் டெல்லி சாணக்கியபுரியில் உள்ள அவரது வீட்டு முன் இந்த ஆர்ப்பாட்டத்தை அவர்கள் நடத்தினர்.
பா.ஜனதா மஹிளா மோர்ச்சாவின் டெல்லி கிளை தலைவர் சிகா ராய் தலைமையில், அதன் தொண்டர்கள் அருந்ததி ராய் வீட்டுக்குச் சென்று, அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அருந்ததிராய் மற்றும் ஹ_ரியத் மாநாட்டுத் தலைவர் சையத் அலி ஷா கிலானி ஆகியேர்களுக்கு எதிராக இந்திய சட்ட அமைச்சகம் ‘தேசத்துக்கு எதிராக அதிருப்தியுடன் இருத்தல்” என்ற பிரிவின் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என்ற ஆலோசனையைத் தெரிவத்திருக்கிறது. இந்த ஆலோசனையை இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சட்ட அமைச்சகம் வழங்கியிருக்கிறது.
இந்த ஆலோசனையை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அருந்ததிராய் மற்றும் சையத் அலி ஷா கிலானி ஆகியேர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வதற்கு பொலிஸாருக்கு அனுமதி வழங்கியதாகவும், ஆயினும் தற்கால நிலைமைகளைக் கருத்தில் கொண்டு வழக்குப் பதிவு செய்வதில்லை என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்தள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது