அரபு நாடுகள் ஜனநாயக ஆட்சி ஏற்படுவதைத் தடுப்பதற்கு அமரிக்கா எதையும் செய்யத் தயாராக இருகின்றது : சொம்ஸ்கி
இனியொரு...
அரபு நாடுகள் ஜனநாயக ஆட்சி ஏற்படுவதைத் தடுப்பதற்கு அமரிக்கா எதையும் செய்யத் தயாராக இருகின்றது என நாஒம் சொம்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில், இது மிகவும் எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடியது ஏனென்றால் அரபு மக்கள் அமரிக்காவை தங்களின் நலன்களுக்கு எதிரான அச்சுறுத்தலாகப் பார்க்கின்ரனர். ஈரானில் அணுவாயுதங்கள் இருக்குமானால் பிராந்தியம் மேலும் பாதுகாப்பானதாக இருக்கும் என 80 வீதமான அராபியர்கள் எணுகிறார்கள். 10 வீதமானவர்களே ஈரானை பிராந்தியத்திற்கு அச்சுறுத்தலான நாடாகக் கருதுகின்றனர். ஆக, அமரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் மக்களின் எண்ணங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசுகளை அங்கு உருவாக்க விரும்பமாட்டாது எனத் தனது உரையில் தெரிவித்தர். அவரது உரையின் முழுமையான பகுதி இங்கே தரப்படுகிறது.