கடாபி கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகின்றார். 1969 ஆம் ஆண்டு இராணுவ புரட்சி மூலம் அவர் ஆட்சியை கைப்பற்றினார்.
அவரின் ஆட்சியில் வேலையின்மை பெருகிவிட்டதாகவும், விலை உயர்வு ஆகிய போன்றவற்றால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறியே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை கடாபியின் ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளமை குதிப்பிடத்தக்கது.
எகிப்தின் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்தே லிபியாவிலும் அதே பாணியிலான போராட்டங்கள் வலுப்பெறத்துவங்கியுள்ளன.
பின்னால் தொண்டர்கள் அணி வகுத்து வந்தனர். எதிர்ப்பு போராட்டங்களை வலுவிழக்கச் செய்யும் விதத்தில், அரசு ஊழியர்களின் சம்பளம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு, தன்னை எதிர்த்ததால் சிறை வைக்கப்பட்ட 110 அரசியல் கைதிகளை விடுவித்தது போன்ற சில தந்திர உத்திகளையும் கடாபி கையாண்டு வருகிறார் .இந்த நிலையில், நேற்று முன்தினம் போராட்டத்தில் பலியானோரின் இறுதிச் சடங்குகள் நேற்று பிங்காசி மற்றும் பெய்டாவில் நடந்தன. பிங்காசியில் பலத்த இராணுவப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தெருக்களில் இராணுவ வீரர்கள் ரோந்து வந்தனர்.கடந்த இரு நாட்களில் மட்டும் போராட்டங்களில் மொத்தம் 24 பேர் பலியானதாக அமெரிக்காவில் இயங்கி வரும் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.லிபியாவில் போராட்டம் மேலும் தீவிரம் அடையாமல் இருக்க, இணையதள சேவைகளை லிபிய அரசு துண்டித்துள்ளது.