Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரச பாசிசத்தை மீறும் எதிர்ப்புணர்வுகள்

இலங்கை அரசிற்கு எதிரான போராட்டங்கள் தெற்கில் சிறிய அளவுகளில் உருவாக ஆரம்பித்துள்ளன. இலங்கையில் ஜனநாயக சூழலை உருவாக்குவதற்கான மக்கள் போராட்டங்களுக்கு இவ்வாறான எதிர்ப்புணர்வுகள் வழிசமைக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

அரசாங்கத்தின் கோட்டைகளில் ஒன்றான அனுராதபுரம் மாநகரசபையின் வரவு – செலவுத்திட்டம் மீண்டும் நேற்று இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை இரண்டாவது தடவையாகவும் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் வரவு –செலவு திட்டம் இவ்வாறு தோற்கடிக்கப்பட்டமை அரசாங்கத்தை அதிர்ச்சியடையச்செய்துள்ளது.

வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது ஆதரவாக ஆறு வாக்குகளும் எதிராக ஏழு வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மூவரும் மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த மூவரும் அரச தரப்பைச் சேர்ந்த ஒருவருமாக ஏழு பேர் வாக்களித்தனர்.

இதேவேளை அனுராதபுரம் மாநகரசபையின் வரவு-செலவுத்திட்டம் கடந்த மாதம் 28ஆம் திகதியும் சமர்ப்பிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version