கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி ரவைகளுக்கும் புலிகளின் மீட்சிக்கும் தொடர்பு இருப்பதான தகவல்கள் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
மேமாதம் 14 ஆம் திகதி சிங்கள பௌத்தர்களின் வெசாக் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இன அழிப்பை வெற்றி எனக் கொண்டாடும் இலங்கை அரசு புலிகள் இன்னும் உயிர்வாழ்வதாகவும் அறிவிக்கிறது.
புலிகள் இயக்கம் மீண்டும் உயிர்க்கிறது என மகிந்த ராஜபக்சவின் அரசு போலிப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறது, அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் அமெரிக்க அரசாங்கம் புலிகளின் சர்வதேச நிதி வலையமைப்பு இன்னும் செயற்படுகிறது என்று தெரிவித்து விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடித்தது. புலம்பெயர் புலிசார் அமைப்புக்களின் தலைமைகள் ஒருபுறத்தில் இலங்கை அரச சார்பாகவும் மறுபுறத்தில் அமெரிக்க அரச சார்பாகவும் செயற்படுகின்றன.
மீட்கப்பட்ட தோட்டாக்கள் புதிதாகத் தோன்றிய புலிகள் என்று இலங்கை அரசு கூறுவதற்கும் அதனை அமெரிக்க இந்திய அரசுகள் ஆமோதிப்பதற்கும் சாத்தியங்கள் தென்படுகின்றன.
இலங்கை வரலாற்றின் இரத்தம் தோய்ந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை வெற்றி என சிங்கள பௌத்த வெறியூட்டும் இலங்கை அரசு மரணித்தவர்களை நினைவு கூரக்கூடாது என தமிழர்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறது. வெசாக் நாளுக்காகன விடுமுறையின் பின்னர் யாழ்.பல்கலைக் கழகம் 21ம் திகதி மே மாதம் வரை மூடப்பட்டிருக்கும் என அதிகாரபீடம் அறிவித்துள்ளது. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களின் நினைவு மனிதர்களுக்கு வந்துவிடக்கூடாது என்றும் அப்படி எதுவும் நினைவு ஏற்பட்டால் அது இரத்தம் உறிஞ்சியதற்கான வெற்றியாக மட்டுமே இருக்க முடியும் என்பதையும் ராஜபக்ச அரசு சொல்கிறது.