அவர்கள் ஜீப்பில் ஏற்றப்பட்ட உடனடியாகவே அவரது கைப்பேசி பொலிஸாரால் பெறப்பட்டுவிட்டதாகத் தெரிகின்றது.
ராகமவில் மகனின் உடலை தாய் அடையாளங் காட்டியதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையை தாயாருக்குக் காட்டிய அதிகாரிகள், சடலத்தை வவுனியாவுக்குக் கொண்டு செல்ல முடியாது எனவும் இறுதிக் கிரியைகளை உடனடியாக கொழும்பில் செய்வதற்கு ஒப்புதல் தருமாறும் வலியுறுத்தியுள்ளார்கள்.
அது தொடர்பான கடிதம் ஒன்றில் கையொப்பமிடுமாறும் தாயார் வற்புறுத்தப்பட்டார். ஒரு கட்டத்தில் கையொப்பமிடாவிட்டால் இதுதான் நடக்கும் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தயாரை அடிப்பதற்கு கை ஓங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரின் கடுமையான அச்சுறுத்தலின் மத்தியிலும் குறிப்பிட்ட ஆவணத்தில் கையொப்பமடுவதற்கு தாயார் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகத் தெரிகின்றது.
தனது மகனின் கால்கள் உடைக்கப்பட்டிருப்பதையும், உடலின் பல பகுதிகளிலும் கடுமையான அடிகாயங்கள் இருப்பதையும் அவதானித்த அவர், மகனின் மரணத்துக்கு மார்படைப்பு காரணமல்ல எனத் தெரிவித்திருக்கின்றார்.