
நடைபெறவுள்ள இளவரசர் வில்லியத்தின் திருமண விழா அழைப்பிதழை, பிரித்தானியாவில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு தூதுவராலயங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென் சிரியாவுக்கான திருமண அழைப்பிதழை, பிரித்தானிய அரச குடும்பம் ரத்துச்செய்துள்ளது. சிரியா நாட்டில் அரச அதிபருக்கு எதிராகப் போராடிவரும் மக்கள் மீது சிரியா இராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், அங்கே மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே திருமண அழைப்பிதழ் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக சென் ஜேம்ஸ் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அதே வேளை, தனது நாட்டில் ஜனநாயகத்திற்கு ஆதரவாகப் போராடிய நால்வருக்கு ராணுவநீதிமன்றத் தீர்ப்பினையடுத்து மரணதண்டனையளித்த கையோடு பஹ்ரைன் மன்னரும் திருமண வைபவத்தில் கலந்து கொள்கிறார்.
இனப்படுகொலை நிகழ்த்திய இலங்கை இந்திய அரசுகளும் கேளிக்கைக் கூத்துக்களில் கலந்துகொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.