Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரசு ; புலிகளுடன் உத்தியோகபூர்வமற்ற புரிந்துணர்வு உடன்படிக்கை?

03.11.2008.

விடுதலைப் புலிகளுடன் உத்தியோகபூர்வமற்ற புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் அரசியல் தீர்வொன்றுக்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சர்வகட்சி குழுவிற்கு ஆலோசனை வழங்க இந்திய விஷேட பிரதிநிதி ஒருவர் விரைவில் இலங்கை வரவுள்ளார்.

இவர் வடக்கிலும் கிழக்கிலும் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை உரிய முறையில் அமுல்செய்வது தொடர்பாக சர்வகட்சி குழுவிற்கு ஆலோசனை வழங்குவார் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்த போது இந்த இந்திய பிரதிநிதியை இலங்கைக்கு அழைப்பதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது. அத்துடன் கிளிநொச்சியை கைப்பற்றிய பின்னர் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் பசில் ராஜபக்ஷ இந்தியாவில் இணக்கம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version