Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரசுடன் இணையுங்கள் கைதிகள் விடுவிக்கப்படுவர் : மனோ கணேசன்

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கடமையாற்றிய விநாயகமூர்த்தி முரளிதரன் அரசாங்கத்துடன் இணைந்தமையால் பிரதியமைச்சராகவும், சிவனேசத்துரை சந்திரகாந்தன் தற்போது கிழக்கு மாகாண சபை முதலமைச்சராகவும் இருந்துள்ளதோடு எதிர்வரும் மாகாண சபை தேர்தலிலும் போட்டியிட உள்ளார்.

மேலும் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தற்போது அரசாங்கத்தின் விருந்தினராக இருக்கின்றார். இவர்கள் எல்லாம் அரசாங்கத்துக்கு எதிராக செயற்ப்பட்டவர்கள். ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்தமையால் இவர்கள் இவ்வாறான ஓர் உயர் நிலையில் இருக்கின்றனர்.

ஆனால் சிறிய குற்றங்கள் செய்த தழிழ் சிறைக்கைதிகள் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். மேலும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளராகச் செயற்பட்ட தமிழினிக்கு புனர்வாழ்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கக் கூடிய விடயம்தான்.

ஆனால் சாதாரண தமிழ் அரசியல் கைதிகளுக்கு மட்டும் புனர்வாழ்வு வழங்க அரசு தயங்குவதேன்?

தற்போது வவுனியா சிறைச்சாலை அதிகாரிகளாலும் பாதுகாவலர்களாலும் தாக்கப்பட்டு கொழும்பு மஹரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த தமிழ் அரசியல் கைதியான நிமல ரூபன் நேற்றிரவு மரணமடைந்துள்ளார். இவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் சில கைதிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாங்கள் இந்த விடயத்தை சர்வதேச மயப்படுத்துவோம். நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதாக அரசாங்கம் அறிவிக்கின்றது. நாங்கள் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காக இவ்வாறு செயற்படவில்லை. எமக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காககவே போராடுகின்றேம் என குறிப்பிட்டார்.

Exit mobile version