Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரசியல் தலைவர்களை படுகொலை செய்ய கோபி திட்டமிட்டிருந்தார்:சர்வதேச சமூகவிரோதி

அண்மையில் படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த கோபி என்ற செல்வநாயகம் கஜீபன், அரசியல் தலைவர்களை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தார் என பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த நிபுணராக கருதப்படும் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

மிகவும் அவசியமான தருணத்தில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக படையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

மேலும், உயிரிழந்த தேவியன் விமானங்கள் பற்றி சிறந்த அறிவாற்றல் மிக்கவர்.
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆலோசனைக்கு அமைய தேவியன் இந்தியாவின் தமிழக மாநிலத்திற்கு தப்பிச் சென்றிருந்தார்.

போர் நிறைவடைந்ததன் பின்னரே தேவியன் நாடு திரும்பியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரோகான் குணரத்ன அல்கையிதா இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களுக்கு எதிராக ஆலோசனை வழங்குபவராக அமெரிக்காவினால் நியமிக்கப்பட்டவர். அமெரிக்க இரட்டைக்கோபுரத் தாக்குதலின் பின்னர் மிக ஐ.நாவில் நடைபெற்ற விவாதத்தில் அல்கைதாவிற்கு எதிரான குழு ஒன்றைத் தலைமை தாங்கியவர். ஆய்வு செய்வாதாகக் கூறி 2000 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பல புலம்பெயர் அமைப்புக்களோடு தொடர்பு வைத்திருந்தவர். சிங்கப்பூர் பல்கலைக் கழகம் ஒன்றில் விரிவுரையாளர். உலகின் உளவு அமைப்புக்களோடு நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவரும் ஆலோசனை வழங்குபவரும் ஆவர். மலேசியாவில் வைத்து கே.பி ஐக் கைது செய்யும் கைங்கரியம் தனது ஆலோசனையின் அடிப்படையிலேயே நடந்ததாகக் கூறுபவர். இலங்கை இனப்படுகொலையின் பின்புலத்தில் செயற்பட்டவர்.

இந்த நபர் மேற்கு அரசுகளின் அடியாள். இலங்கை அரசிற்கும் மேற்கு ஏகாதிபத்தியங்களுக்கும் இணைப்பாளர்.

உலகின் சமூகவிரோதிக்குரிய அத்தனை தகமைகளையும் கொண்டிருக்கும் இவர் புலிகளை மீள உருவாக்கும் ஆலோசனையை மேற்கு அரசுகளின் சார்பில் இலங்கை அரசிற்கு வழங்கினாரா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. இதற்கு தெய்வீகனை உருவாக்குவதன் பின்னணியில் இந்திய உளவுத்துறை செயற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் வெளியிடப்பட்டன.

Exit mobile version