தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கடந்த மாதம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கைதிகளை விடுதலை செய்வதற்கு விசேட நான்கு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு அவர்களின் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் உறுதி மொழி வழங்கியது.
இதனையடுத்து, கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டமும் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
எனினும், அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என முற்போக்கு சோசலிக் கட்சியின் உறுப்பினரும் நாம் இலங்கையர் அமைப்பின் ஏற்பாட்டாளருமான உதுல் பிரேமரத்ண குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் தொடந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.