Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரசியல் குற்றமயப்படுத்தப் பட்டுள்ளமை பெண்களது பங்களிப்புக்கு பாரிய தடை:ரஞ்சித் தேவ்ராஜ்

புதுடில்லி: பெரிய அரசியற்கட்சிகள் அரசியலிற் பெண்களுக்கான இடத்தை அதிகரிப்பதற்கு உத்தரவாதம் அளித்தநிலையில், நாட்டில் அரசியல் குற்றமயப்படுத்தப்பட்டுள்ளமை பெண்களது பங்களிப்புக்கு பாரிய தடையாக அமைந்துள்ளது.

“”குற்றச்செயல்களும், ஊழலும் வேறெந்தக் காரணிகளிலும் பார்க்க பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு பாரிய தடையாக அமைந்துள்ளன.’ என்கிறார் மதுகிஷ்வார், இவர் பெண்களது உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் மனுஷிசங்கத்தின் ஆரம்பகர்த்தா.

ஏப்ரல் 16 தொடக்கம் மே 13 வரையிலான காலப்பகுதியில் நடத்தப்படுமெனத் திட்டமிடப்பட்ட இப்போதைய தேர்தல் ஆரம்பமாகும் முன்னர் பெரிய கட்சிகள் 1997 தொடக்கம் நடைமுறைப்படுத்தத் தவறிய பெண்களுக்கு 33 வீத ஆசனங்களை பாராளுமன்ற சபைகளில் ஒதுக்குவதென்ற உத்தரவாதத்தை மீண்டும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அழுத்திக் கூறியுள்ளன. இத்தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்று 715 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 44 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமை 1984 இலும், 20 வருடங்களுக்கு முன்னர், 44 பெண்களே தேர்ந்தெடுக்கப்பட்டமையிலிருந்து மிகக் குறைந்தளவு முன்னேற்றமே ஏற்பட்டது என்பதைக் காட்டுகிறது. இப்போது நடைபெறும் தேர்தலில் 6,538 அபேட்சகர்கள் பங்குபற்றுகின்றனர். அவர்களுள் பெண்கள் 462 பேர் மாத்திரமே. இது நடைபெற்ற நான்கு கட்ட தேர்தல்களில் பங்குபற்றியோர் விபரமாகும்.

பெண்கள் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கு இலகுவான வழி அவர்கள் தமது ஆண் உறவினர்களது வெற்றியைப் பயன்படுத்தி அரசியற்கட்சிகளுட் பிரபல்யமும் அதிகாரமும் பெற்றுப் பின்னர் பாராளுமன்ற ஆசனங்களைப் பெறும் முயற்சியில் ஈடுபட வேண்டும். உதாரணமாக சோனியாகாந்தி, காங்கிரஸ்கட்சியில் அசைக்க முடியாத அதிகாரம் செலுத்தும் நேருகாந்தி குடும்பத்தினால் அதிகாரம் பெற்று முன்னுக்கு வந்தவர்.

அதேவிதமாக மாயாவதி இன்று மிகப்பெரிய மாகாணமான உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராக உள்ளார். இவர் இந்தியாவின் தலித் மக்களை ஒன்றுகூட்டிய சகாவான கான்ஷிறாமினால் உயர்வுபெற்றவர். கான்ஷிறாம் அதிகார வலுமிக்க பகுஜன் சமாஜ் கட்சியைக் கட்டிவளர்த்தவர்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இரண்டு முறை பணியாற்றிய ஜெயராமன் ஜெயலலிதா அவரது சகாவும், இணை சினிமா நட்சத்திரமான எம்.ஜி. இராமச்சந்திரனால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவர்.

மாயாவதி போன்று ஜெயலலிதாவும் பிரதமர் பதவியில் நாட்டம் கொண்டவர். இத்தகைய பெண்கள், வேறு பெண்கள் தம் கட்சிகளில் தலையெடுக்கும் நிலையை விரும்புவதில்லை.’என்கிறார் வீமென் பவர் கொனெக்ற்றின் தலைவர் றஞ்சனாகுமாரி.

“இந்தியாவின் பொதுத்தேர்தலில் சாதாரண பெண்ணொருவர் வேட்பாளராக நிற்க விரும்பின் பலமிக்க பலனை எதிர்கொள்ள வேண்டியவராவர் எனக் குமாரி கூறுகிறார். மேலும் பெண் வேட்பாளர்கள் அரசியல் குற்றமயமாக்கப்பட்ட நிலையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அவர் கூறுகிறார்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ், அதன் கூட்டணிக்கட்சிகள், பாரதீய ஜனதாக்கட்சி, அதனது கூட்டணிக் கட்சிகள் ஆக மிக வலிமைவாய்ந்த இரு கட்சிகளிடையே நடைபெறுவதால், ஒவ்வொரு வேட்பாளரும் வெற்றிபெறுவது மிகக்கடினமானதாகும். இங்கு பணம், உடல்வலு பாரிய பங்கை வகிக்கின்றன. இவையே குற்றச் செயல்களுடன் இணைக்கப்பட்டவையாகும் எனக் கூறுகிறார் குமாரி. ஒரு பாராளுமன்றத் தொகுதிக்குப் போட்டியிடுவதாயின் சராசரியாக 2 மில்லியன் டொலர்கள் தேவைப்படுகிறது.

“அரசியல் அசிங்கமானது நீர் ஒரு பெண்ணாயின் உமக்கு குடும்பத்தைச் சேர்ந்த ஆண் அங்கத்தவர்களின் உதவி தேவை. தந்தை, சகோதரர்கள், கணவன் இவர்கள் நடைபெறும் சகல குற்றச் செயல்களுக்கு ஈடுகொடுப்பவர்களாக உதவுவர், என்கிறார் கிஷ்வார்.

உண்மையில் இந்தியாவினது மிகப்பெரிய கறுப்புப் பொருளாதாரம் தேர்தல் முறையில் மிக இணைந்துள்ள நிலையில் ஒன்று மற்றையதை இரையாக்கிக் கொள்கிறது. “கடந்த 15 வருடங்களாக, குற்றச் செயல்களில் ஈடுபட்ட பல வேட்பாளர்கள் தேர்தல்களில் பங்குபற்றுகிறார்கள்’ என்கிறார் லோக்நிரியின் உபபணிப்பாளர் சஞ்சேகுமார்.

தேர்தல் சம்பந்தமான வன்செயல்கள், ஒன்று சேர்த்தல் ஆகியவற்றின் நிபுணத்துவம் பெற்ற வரானகுமார் ஐபிஎஸ்ஸிற்கு கூறியதாவது;

“பணமோ, உடல் வலுவோ இன்மை பெண் ஒருவரைத் தேர்தலில் பங்குபற்றுவதிலிருந்து தடுக்கமாட்டாது. அரசியற் கட்சிகள் பெண்கள் இந்த அவலங்களுக்கு முகங்கொடுத்து வெற்றியடையமாட்டார்கள் எனச் சந்தேகிக்கின்றன’.

தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தான் 1993 பஞ்சாயத்துகளிலும், பட்டினி சபைகளிலும் பெண்களுக்கு 33 வீதமான இடங்கள் ஒதுக்கும் திருத்தங்களைப் பாராளுமன்றில் நிறைவேற்றியதாகக் கூறுகிறது காங்கிரஸ் கட்சி.

“இன்று பஞ்சாயத்துகளில் 40 வீதமானவர்கள் பெண்கள். ஆனால், ஒதுக்கப்பட்ட விகிதம் 33 மட்டுமே. இது ஒரு அமைதியான புரட்சி’ என காங்கிரஸ் தேர்தல் விஞ்ஞாபனம் பிதற்றுகிறது. எனவே அதிகாரத்திற்கு வந்தால் இதனை மாகாண சபைகளுக்கும் பாராளுமன்றத்துக்கும் விரிவுபடுத்துவதாகக் கூறுகிறது. ஆனால் அதனது எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கூறுவதாவது;

“காங்கிரஸ் கட்சிக்கு பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதை எதிர்க்கும் நேசக்கட்சிகளை எதிர்க்கும் வல்லமை இல்லை’.

ஆனால், இரண்டு கட்சிகளும் 2004 ஆம் ஆண்டில் தேர்தலில் நிறுத்திய பெண் வேட்பாளர்களிலும் பார்க்கக் குறைவான பெண் வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளன. கிஷ்வார் குறிப்பிடுவதாவது;

பெண்களது பங்களிப்புக்குச் சிறந்த வழி, இன்றைய நிலையில், உள்ளூர் அரசியலில் அதிகளவிற் பங்குபற்றுவதாகும். இங்கு அவர்கள் ஏற்கனவே அதிகாரம் பெற்றுள்ளனர். அயலிலேயே அரசியலிருந்து ஊழலையும் குற்றச்செயல்களைக் களைத்து அதனைத் தூய்மைப்படுத்துவது இலகுவானது. மேலும் ஒதுக்கீடுகள் மாநிலங்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் அதிகரிக்கப்படும்வரை, பெண்கள் உள்வீட்டிலேயே சபைகளை ஜனநாயக மயமாக்கும்படி தமது கட்சிகளை நெருக்கவேண்டும். மேலும் தகுதியுள்ள பெண்களுக்கு தகுதியின் அடிப்படையில் குடும்ப அந்தஸ்தின் அடிப்படையில் அல்ல நியமனங்கள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஐ.பி.எஸ்.

Exit mobile version