Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரசியல் உரிமை கிடையாது : கொலை மிரட்டல் பிரசுரங்கள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய சில தரப்புகளுக்கு மீண்டும் கொலை அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் யாழ் பல்கலைக்கழக வீதிகளை அண்டிய சூழலில் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற சிலரே முகமூடிகளைக் கொண்ட ஹெல்மட்டுக்களை அணிந்த வண்ணம் இந்தத் துண்டுப்பிரசுருங்களை வீசிச் சென்றுள்ளனர்.

நாட்டைக் காக்கும் தமிழர் பாதுகாப்புக் கூட்டமைப்பு என்ற பெயரிலேயே இத்துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே குடாநாட்டிலுள்ள ஊடக சமூகங்கள் மற்றும் பல்கலைக்கழக சமூத்தினருக்கு மரண அச்சுறுத்தலை விடுக்கும் இத்தகைய துண்டுப்பிரசுரங்கள் ராணுவப் புலனாய்வுப்பிரிவு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் சிலவற்றின் அரசியல் பின்னணியில் வெளியிடப்பட்டு வருவதாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தன.

இந்தத் துண்டுப் பிரசுரத்தில் நாட்டின் அரசியல் ஆட்சி மாறினாலும் எமது ஆயதம் தாங்கிய கைகள் ஓயயப் போவதில்லை எனவும் எமது ஆயதங்கள் ஓயாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் மீண்டும் தமது கற்றல் செயற்பாடுகளைக் கைவிட்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடபடுவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. நாட்டின் அனைத்து மக்களுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் மக்கள் அழிவினை நோக்கிச் செல்வதனை மேலும் அனுமதிக்க முடியாது எனவும் அந்த அiமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பின் கஜேந்திரன் உடனடியாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அவ்வாறு வேளியேறாவிட்டால் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அனுப்பி வைக்கப்பட்ட இடத்திற்கே அனுப்பி வைக்கப்படுவார் என அவ்வமைப்பினால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் புலிச்சார்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அந்த அமைப்பு புலிச்சார்பு நீதிபதியான இளம்செழியன் அவரது சகோதரரான இளம்பிறையன், கஜேந்திரன் அவரது சகோதரரான ரவீந்திரன் உள்ளிட்ட மேலும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் மீண்டும் பல்கலைக்கழகத்தில் தமிழர் போராட்டம் என்ற பெயரிலான சில போராட்டங்களை முன்னெடுப்பதாகவும் இதனாலேயே அவர்கள் மீது தாம் கடும் நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருப்பதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் வெறுமனே கல்வியில் மட்டுமே அக்கறை செலுத்த வேண்டும் எனவும் மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது குறித்து பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிடின் மாணவர்கள் மீது தாம் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த காலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் பாடசாலை மாணவர்கள் மரணத்தை தழுவியதை சுட்டிக் காட்டிய அந்த அமைப்பு இதனால் அவர்களின் பெற்றோர்கள் ஏதிலிகளாக ஆக்கப்பட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்த 10ற்கும் மேற்பட்டவர்களுக்கு மரண அச்சுறுத்தலை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்களை இந்த அமைப்பு விநியோகத்ததுடன் சுவரொட்டிகளையும் ஒட்டியிருந்தது. அத்துடன் குடாநாட்டில் உள்ள ஊடக சமூகத்தினருக்கு கொலை அச்சுறுத்தல்களை விடுக்கும் பின்னணியில் நாட்டைக் காக்கும் தமிழர் கூட்டமைப்பு என்ற பெயரே கையாளப்பட்டு வந்தமையும் குறிப்படத்தக்கதாகும்.

அண்மைக்காலமாக யாழ் பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ் சமூகம் என்ற அமைப்பு மீண்டும் செயற்படத் தொடங்கி உள்ளமையும் பொங்குதமிழின் அடுத்த கட்ட நிகழ்வுகள் நடைபெறுவது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளிவருவதும் தெரிந்ததே. இதன் பின்னனியிலேயே இந்த கொலை அச்சுறுத்தல் விடுக்கப்ட்டுள்ளது.

நன்றி :  உலக தமிழ்  செய்திகள்

Exit mobile version