Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரசியல்வாதிகளே அரசாங்க ஊடகங்களின் முன்னணித் தலைவர்களாக கடமையாற்றுகின்றனர்!

presidentmidiaஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியை வகித்துக் கொண்டு அரச ஊடக நிறுவனங்களில் முதல்நிலைப் பதவிகளை வகிக்கும் அதிகாரிகளை தேர்தல் முடியும் வரை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு ஊடகவியலாளர் டி.பீ.எல்கடுவ தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அரச ஊடகங்களில் இவர்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மற்றும் தார்மீக விரோத நடவடிக்கைகளை நிறுத்துமாறும் அவர் கேட்டுள்ளார்.

தேர்தல் ஆணையாளருக்கு கடிதமொன்றை எழுதியுள்ள எல்கடுவ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் கரு பரினவித்தான, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களில் ஒருவர் எனவும் சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் அட்சன் சமரசிங்க, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எனவும், குருணாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரான சுதர்மன் ரெதலியகொட சுயாதீன தொலைக்காட்சியின் பிரதிப் பணிப்பாளர் எனவும் கொழும்பு மாவட்டத்தின் மற்றுமொரு அமைப்பாளரான லலித் டி சில்வா, சுயாதீனத் தொலைக்காட்சியில் இடம்பெறும் பத்திரிகை விமர்சன நிகழ்ச்சியை நடத்துபவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version