Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரசியலிலிருந்து ஒதுங்கப் போகிறேன்:டக்ளஸ் நகைச்சுவை

Douglasஎனக்கு எமது மக்களின் உரிமைகளே பிரதானம். எமது மக்களின் நிரந்தர மகிழ்ச்சியே எனதும் நீடித்த மகிழ்ச்சி ஆகும்.
அரசியலுரிமை, அபிவிருத்தி மற்றும் எமது மக்களின் வாழவ்வாதார உரிமைகளை மத்திய அரசில் இருந்து எமது மக்களுக்கு பகிர்ந்தளிக்கவே நான் அரசில் அங்கம் வகித்து வருகின்றேன்.
பலரது தூற்றுதல்களுக்கு மத்தியிலும் நான் தொடர்ந்தும் அரசில் அமைச்சராக பங்கெடுத்து வருவது எமது மக்களுக்காகவே. எனது சாணக்கிய தந்திர மதிநுட்ப வழிமுறை மூலம் எமது மக்களுக்காக பலதையும் நான் ஆற்றி வருகின்றேன். எமது வழிமுறை மூலம் அனைத்து உரிமைகளையும் பெற்று விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
உள்நாட்டில் அனைத்து தமிழ்க் கட்சி தலைமைகளும் இணைந்து யதார்த்த வழிமுறையில் நல்லெண்ண சமிக்ஞையை அரசுக்கு காட்டாத வரை சர்வதேச அழுத்தங்கள் எமது மக்களுக்கு ஒரு போதும் எந்தத் தீர்வையும் பெற்றுத்தராது.
யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எமது வழிமுறையை பின்பற்றி கலந்து கொள்ள முன்வந்திருப்பதும் தமிழ் பேசும் மக்களின் நலன் சார்ந்தது என்பது உண்மை என்றால், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் ஊடாகவும் எமது மக்களுக்கான இறுதித் தீர்வை நோக்கிச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வர வேண்டும் என நான் மீண்டும் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன்.
எனத் தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் எமது மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்ளத் தவறினால் அரசில் தொடரந்தும் அங்கம் வகிப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அரசியல் வழிமுறை பயனற்றது என்றே ஆயுதமேந்திய டக்ளஸ் போன்றவர்கள் 25 ஆண்டுகளாக மீண்டும் பேரினவாதிகளோடு பாராளுமன்றத்தில் கைகோர்த்துக்கொண்டார்கள். வன்னிப் படுகொலை உட்பட பல அழிவுகளுக்குத் துணை போயினர், இன்று அரசியலில் இருந்து விலகப் போவதாகக் கூறுவது கோரமான கோமாளித்தனம்.

‘எனது வழிமுறை மூலம் அனைத்து உரிமைகளையும் பெற்று விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. உள்நாட்டில் உள்ள அனைத்த தமிழ் கட்சி தலைமைகளும் இணைந்து நல்லெண்ண சமிக்ஞையை அரசுக்குக் காட்ட வேண்டும்’ என்றார். இதுவரை இந்த வழிமுறை இனக்கொலையாளிகளைக் காப்பாற்றவே வழி செய்திருக்கிறது என்பதை டக்ளஸ் மறந்துவிடுகிறார். ஒடுக்குபவர்கள்தான் நல்லிணக்கத்தைக் காட்டவேண்டும் ஒடுக்கப்படுபவர்கள் அல்ல.

Exit mobile version