Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரசாங்கத்தை எதிர்க்கப்போவதில்லை : சுமந்திரன்

Sumanthiran maஅரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவு எதனையும் எடுக்கவில்லை என ஊடகவியலாளர் சந்திப்பில் சுமந்திரனிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலிறுத்த சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியான அழுத்தங்களை இது தொடர்பாகக் கொடுத்துவருவதாகவும், அரசாங்கத்தோடு தொடர்ச்சியாகப் பேசிவருவதாகவும் குறிப்பிட்டார். புதிய சட்டமா அதிபர் நியமிக்கப்படும் வரை தமக்கு கால அவகாசம் தருமாறு கேட்டிருந்தார்கள் அதற்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்றார்.

எவ்வளவு கால எல்லைக்குள் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனக் கேட்கப்பட்டதற்கு, நவம்பர் மாதம் ஏழாம் திகதிக்குள் விடுவிக்கப்படுவார்கள் எனக் கூறியிருந்தாலும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. ஆக, காலக்கெடுவிற்காகக் காத்திருந்து அதனை நிறைவேற்றாமல் போவதில் பயனில்லை. இருந்தாலும் ஐம்பது கைதிகளுக்கு மேல் விடுதலை செய்யப்படுள்ளனர். அரசாங்கத்தின் எல்லச் செயற்பாடுகளும் நாம் எதிர்பார்த்த காலக்கெடுவிற்குள் நடக்கவில்ல்லை. நூறு நாளில் எல்லாக் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று உறுதியளித்திருந்தாலும் ஒரு பகுதிக் காணிகளே விடுவிக்கப்பட்டன. ஆக, தாமதம் எல்லாவற்றிலும் இருக்கிறது. தாமதம் இருக்கக்க்கூடாது என அரசிற்குக் கூறியிருந்தாலும் கூட தாம் அரசாங்கத்தை எதிர்க்கப்போவதில்லை எனக் பதிலளித்தார்.

இலங்கை வரலாற்றில் அரசாங்கத்தை எதிர்க்கப்போவதில்லை எனக் கூறிய முதலாவது எதிர்க்கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. இலங்கையில் மேற்கு நாடுகள் ஒட்டவைத்த ஜனநாயகம் முழுமையான சர்வாதிகார ஆட்சியாகச் சட்டரீதியாக மாற்றப்பட்டுள்ளது

ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும், எதிர்கட்சியின் எதிர்த் தரப்பும் மேற்கு ஏகாதிபத்திய நாடுகளின் கட்டுப்பாட்டிலேயே செயற்படுகின்றன.

வடக்குக் கிழக்கில் மக்கள் தமது வாழ்வியல் உரிமைக்கான போராட்டங்களை நடத்துகிறார்கள். நாளாந்த நிகழ்வாகிவரும் இப் போராட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அதன் எதிர்த்தரப்பாகக் கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ கலந்துகொள்வதில்லை. வன்னிவரை அழிப்பை நடத்திய அன்னிய தேசங்களிடம் அடகுவைக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களது தலைவிதி இன்று தீர்மானிகப்பட்டுக்கொண்டிருக்கிறது. அங்கு அரசின் எந்த நடவடிக்கைகளுக்கும் எதிர்த் தரப்பு இல்லை.

Exit mobile version