அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதா இல்லையா என்பதனை வெகு விரைவில் தீர்மானிக்க நேரிடும் என கட்சி தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் ஜனநாயகத்தை நிலைநாட்டவுமே ஜே.வி.பி ஆதரவளிக்கும் என மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நல்லாட்சியை ஏற்படுத்த பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட சகல வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் தற்போதைய அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்ப காலம் தாழ்த்தப் போவதில்லை என வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அடிப்படை ஜனநாயக உரிமையான சுய நிர்ணைய உரிமையை நிராகரித்து சிங்கள-தமிழ் உழைக்கும் மக்களை ஏகாதிபத்தியங்களுக்கு விற்பனை செய்துவிட்டு நல்லாட்சி எனக் கூச்சலிடுவதால் எந்தப் பயனும் கிட்டப் போவதில்லை.