Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரசபயங்கரவாதி கோத்தாபயவின் படைகளால் தாக்கப்பட்ட பௌத்த துறவி விடுதலை

Gotabaya_Rajapaksa_Bodu_Bala_Senaதனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜாதிக பல சேனா அமைப்பின் தலைவர் வட்டரக்கே விஜித தேரர் தெரிவித்துள்ளார். என்றாவது ஒரு நாள் உண்மை ஜெயிக்கும். கடந்த 13 நாட்களாக சோறும் சம்பலும் சாப்பிட்டு சிறைச்சாலையில் பாதுகாப்பாக இருந்தேன்.

கடந்த ஓராண்டு காலமாக எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 20ம் திகதி பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஜூன் மாதத்தில் இந்த பாதுகாப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது என வட்டரக்கே விஜித தேரர் தெரிவித்துள்ளார். போலியாக தம்மைத் தாமே தாக்கிக் கொண்டு முறைப்பாடு செய்ததாக வட்டரக்கே விஜித தேரருக்கு எதிராக பாணந்துறை நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இலங்கை அரச பயங்கரவாதி கோத்தாபய ராகஜபக்சவின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் பொதுபல சேனாவினால் தாக்கப்பட்ட இப் பௌத்த துறவியை தம்மைத் தாமே தாக்கியதாக நீதிமன்றம் தீர்ப்புக்கூறி சிறையிலடைத்தது.

பொதுபல சேனாவின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல்கொடுத்த பௌத்த துறவி சிறை தனக்குப் பாதுகாப்பானது எனக் கருதுகிறார்.

கடந்த சில நாட்களாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த விஜித தேரர் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார். தலா 50,000 ரூபா இரண்டு சரீரப் பிணை மற்றும் 10,000 ரூபா ராக்கப் பிணை ஆகியவற்றின் அடிப்படையில் வட்டரக்கே விஜித விடுதலை செய்யப்பட்டார்.

Exit mobile version