இலங்கை இராணுவப் பட்டாளத்தால் சுற்றி வளைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவர்தில் மூன்று போராளிகளும் ஒரு இராணுவமும் உயிரிழந்துள்ளது.
அப்பன், தேவியன், கோபி ஆகியோரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளனர்.
இத் தகவல்கள் எவ்வளவு உண்மையானது என்ற கேள்விகளுக்கு அப்பால், இந்த மூவரும் போராடத்தை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என ஆர்வம் கொண்டிருந்தனர். இலங்கையிலிருந்து தப்பிச்செல்ல வாய்ப்புக்களிருந்தும் அதனை நிராகரித்தவர்கள். இவர்களின் உணர்வு பெறுமதி மிக்கது. மக்களின் அழிவைக்கூட மூலதனமாக்கிக்கொள்ளும் கூட்டத்தின் மத்தியில் இந்த உணர்வே ஆயிரம் போராளிகளுக்கு ஒப்பானது.
முன்னை நாள் விடுதலைப் புலிகளின் பல உறுப்பினர்கள் இலங்கை அரச படைகளால் மீண்டும் கைது செய்யப்படுகின்றனர். வாழ்வா சாவா என்ற நிலையில் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் அழிப்பு நடவடிக்களின் பின்னர் கொலைவெறியூட்டப்பட்ட இலங்கை அரச படைகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளவும், அப்பாவி மக்கள் மீதான ஒடுக்குமுறையைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டும் மீண்டும் முன்னைய வழிகளிலேயே போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் போராளிகள் உணரத் தலைப்படுதல் நியாயமானதே.. தமது வாழ்நாளைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்த போராளிகள் மத்தியில் இவ்வாறான உணர்வுகள் இயல்பானதே, எது எவ்வாறாயினும் இலங்கை அரச பாசிசம் முன்னெப்போதையும் விட தனது ஒடுக்குமுறை இயந்திரங்களைப் பலப்படுத்தியுள்ளது.
அன்னியர்களாலும் ஏகாதிபத்திய நாடுகளாலும் கையாளப்பட்டு இறுதியில் அவர்களுக்குத் தேவையற்ற வேளையில் அழிக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் புதிய அரசியலுடனும் புதிய வழிமுறைகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டும். மிகப்பெரும் இராணுவத்தின் ஒடுக்குமுறை இயந்திரத்தை எதிர்கொள்வது என்பது இயலாத ஒன்றல்ல. ஆனால் அதற்கான புரட்சிகர அரசியல் வழிமுறை திட்டமிடப்பட வேண்டும், சிறிய இடைவெளிகளைக் கூடப் பயன்படுத்தி மக்களை அணிதிரட்டுவது அடிப்படையானதாகும்.
இலங்கையில் பெரும்பான்மையானவர்கள் ராஜபக்ச அரசின் மீது வெறுப்புணர்வு கொண்டவர்களே. தமிழ்ப் பேசும் இஸ்லாமியர்களும், மலையகத் தமிழர்களும், சிங்கள உழைக்கும் மக்களும் ராஜபக்ச அரசின் மீது வெறுப்புக்கொண்டுள்ளனர்.
இவர்கள் அனைவரோடும் இணைந்த அரசியல் திட்டம் ஒன்றே ராஜபக்ச அரசைப் பலவீனப்படுத்தும் ஆரம்பமாக அமைய முடியும். இதனூடாக மக்களை அணிதிரட்டுவது எவ்வாறு என்பதைத் திட்டமிட வேண்டும். மக்கள் பற்றுள்ள உலகளாவிய ஜனநாயக வாதிகளையும், மனிதாபிமானிகளையும் வென்றெடுக்கும் வழிமுறைகளைக் கண்டறியவேண்டும்.
இந்திய மற்றும் மேற்கு ஏகாதிபத்தியங்களால் எந்தக் நேரத்திலும் சிதைக்கப்படக்கூடிய போராட்டத்தைப் சுற்றிப் பாதுகாப்பு அரண்களாக உலக முற்போக்கு சக்திகளோடு பரஸ்பர ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
2009 இற்குப் பின்னர் இழந்துபோன ஐந்து வருடங்கள் இவற்றிற்குப் போதுமான இடைவெளியைத் தந்திருந்தும் பிழைப்புவாத அரசியல் தலைமைகளால் இவை அனைத்தும் சிதைக்கப்பட்டன.
புதிய போராளிகள் ஆயுதங்களிலிருந்து போராட்டத்தை ஆரம்பிப்பது தவறானது ஆனல் போராட்டத்தின் தற்காப்பு யுத்தம் தவிர்க்க முடியாத வன்முறைக்கே மக்களை அழைத்துவரும் என்பதை மறுக்கமுடியாது.
ஆக, இலங்கையிலோ அன்றி இலங்கைக்கு வெளியிலோ தேசிய விடுதலைப் போராட்டம் குறித்து சிந்திக்கும் செயற்படும் ஒவ்வொருவரும் இந்த அடிப்படைகளை உணர்ந்துகொள்ள வேண்டும்.
வீர மரணமடைந்த போராளிகளுக்கு இனியொருவின் விர அஞ்சலி!