1992- ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி அயோத்தியில் பழமையானதும் பாரம்பரீயமானதும் இஸ்லாமிய மக்களின் வழிபாட்டு நம்பிக்கைக்குரியதுமான பாபர் மசூதி இந்துப் பாசிஸ்டுகளால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. பிஜேபிக்கு சற்றும் குறைவில்லாத காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்க்க இந்த ஈனத்தனம் அரங்கேறியது. அதையொட்டி நாடெங்கிலும் இந்து, முஸ்லீம் கலவரம் கட்டவிழ்த்து விடப்பட ஆயிரக்கணக்கான மக்கள் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். நாடெங்கிலும் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான பெரும்பான்மை வாதம் கட்டியெழுப்பட்ட காலமும் இதுதான். சுமார் சுமார் 18 ஆண்டுகள் ஆகும் நிலையில் மசூதி இருந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக வெள்ளியன்று வழங்கப் படுவதாக அலகாபாத நீதிமன்றத் தீர்ப்பை செப்டம்பர் 28ம் தேதி வரை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரித்த இரு நீதி பதிகளும் முரண்பட்ட கருத்தை தெரிவித்ததால் பர பரப்பு ஏற்பட்டது.அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த இடம் குறித்த 60 ஆண்டு கால வழக்கில் செப்டம்பர் 24 வெள்ளியன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறப் போவதாக அறிவித்திருந் தது. இதனால் நாடு முழுவ தும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.இந்நிலையில், இந்த தீர்ப்பை ஒத்திவைக்க வேண் டும் என்று கோரி முன்னாள் அரசு அதிகாரி ரமேஷ் சந்த் திரிபாதி என்பவர் அலகா பாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அதை உயர்நீதிமன் றம் கடந்த 17ஆம் தேதி தள் ளுபடி செய்தது. இதைய டுத்து உச்சநீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார்.இந்த மனு புதன்கிழமை நீதிபதிகள் அல்த்மாஸ் கபீர், ஏ.கே.பட்நாயக் ஆகி யோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்த போது இதை விசாரிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல் லை என்று கூறி விட்டனர். இதையடுத்து திரிபாதியின் மனு வியாழனன்று வேறு பெஞ்ச் முன்பு விசார ணைக்கு வந்தது.
விசாரணை அமர் வாயத்தில் இடம் பெற் றிருந்த இரு நீதிபதிகளும் முரண்பட்ட கருத்தைத் தெரிவித்தனர். இறுதியில் அயோத்தி தீர்ப்பை செப் டம்பர் 28ம் தேதிக்கு தள்ளி வைத்து பெஞ்ச் உத்தரவிட்டது.முன்னதாக நீதிபதி எச். எல்.கோகலே, இந்த விவ காரத்தில் சமரசம் பேச வாய்ப்பு உள்ளது என்றால் அதற்கான வாய்ப்பு அளிக் கப்பட வேண்டும். ஒரு சதவீத வாய்ப்பு இருந்தால் கூட பரவாயில்லை, அதை அளிக்க வேண்டும். ஒரு தீர்ப் பால் பலரும் பாதிக்கப்படக் கூடும். எனவே பேச்சுவார்த் தைக்கு மதிப்பளித்து அதற் கான வாய்ப்புகளை ஏற் படுத்த முயற்சிக்கலாம். அதில் எந்தத் தவறும் இல்லை.
இந்த தீர்ப்பால் பாதிப்பு ஏற்பட்டால் அது மக்க ளைத்தான் பாதிக்கும். மக் களை பாதித்தால் அவர்கள் உச்சநீதிமன்றத்தைத்தான் குறை கூறுவார்கள். எனவே இந்த தீர்ப்பை தள்ளி வைக் கலாம் என்று தெரிவித்தார்.ஆனால், இந்த அமர் வாயத்தின் தலைவரான நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன், இந்த மனுவையே தள்ளு படி செய்ய வேண்டும் என்று தீர்மானமாக தெரி வித்தார். இருப்பினும் நீதி பதி கோகலே கருத்தை மதிப்பதாக தெரிவித்த அவர், தீர்ப்பை தள்ளி வைக்க சம்மதித்தார். இதையடுத்து செப்டம்பர் 28ம்தேதிக்கு தீர்ப்பை தள்ளி வைத்த நீதி பதிகள், திரிபாதியின் மனு மீதான விசாரணையையும் அன்றைய தினத்திற்கே தள்ளி வைத்து உத்தரவிட் டனர்.இதன் மூலம், பெரும் பரபரப்பாக எதிர்பார்க்கப் பட்ட அயோத்தி தீர்ப்பு வெள்ளியன்று வெளிவராது என்பது உறுதியாகியுள்ளது. செப்டம்பர் 28ம் தேதி உச்சநீதிமன்றம் தெரிவிக்கப் போகும் உத்தரவைப் பொறுத்தே அயோத்தி தீர்ப் பின் எதிர்காலம் அமைந் துள்ளது.