கடுமையான வேதனையில் அவதிப்பட்டு வந்த அவர் தனது கருவை கலைக்கவேண்டி பலமுறை ஹால்வேயில் உள்ள யுனிவர்சிட்டி ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். இவ்வாறு கடந்த மாதம் சென்றபோது கரு துடிப்புடன் இருந்தது. ஆனால், கத்தோலிக்க கிறிஸ்தவ நாட்டில் கருக்கலைப்பு செய்ய முடியாது என்று கூறி டாக்டர்கள் மறுத்துவிட்டனர்.
சவிதாவின் இறப்பை அடுத்து கருக்கலைப்பு மறுப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கருக்கலைப்பு விதிகளை சற்று தளர்த்தக் கோரி 2 ஆயிரம் பேர் தலைநகர் டப்ளினில் நாடாளுமன்றத்திற்கு வெளியே பேரணி நடத்தினர்.
இதேபோல், சவிதாவின் மரணத்துக்கு கண்டனம் தெரிவித்து லண்டனில் அயர்லாந்து நாட்டு தூதரகம் எதிரே நேற்று மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், சவிதாவின் மரணம் குறித்து விசாரணைக்கு அந்நாட்டு சுகாதாரத்துறை ஜேம்ஸ் ரெய்லி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அயர்லாந்து பிரதமர் எண்ட கென்னி கூறுகையில், ‘‘விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.