. அப்படியா? என்று கேட்டு விட்டு தொலைபேசி தொடர்பை துண்டித்து விட்டேன். ரஞ்சித் என்ன நினைத்தார் என்று தெரிய்வில்லை. நான் எனது பத்திரிகை பணி தொடர்பாக அடூர், எம்.டி.வி, சிபி மலையில், சீனிவாசன் என என்மனதுக்குப் பிடித்தவர்களை பேட்டி எடுக்க அலைந்த காலங்கள் ரஞ்சித்துக்குத் தெரியும். அவர் அந்த அளவில் லோகித தாஸ் எனது பிரியமான ரசனைக்குரியவராக இருக்கக் கூடும் என நினைத்து எனக்கு தகவல் சொல்லி யிருப்பார் என நினைக்கிறேன்.ஆனால் சமீபகாலமாக அதிகளவான மரணங்களைக் கண்டதும் சூழ நிலவிய அறிவுஜீகளின் மௌனமும், பிறமாநில படைப்புலகின் மௌனமும் ஒரு விதமான அயர்ச்சியை எனக்கு ஏற்படுத்தியதால். யாருடைய மரணமும் பெரிய பாதிப்புகளை என்னுள் ஏற்படுத்தவில்லை. ஆனால் அது உண்மைதான் லோகித தாஸின் படங்கள் எனக்கு பிடித்தமானவை. நான் நேசித்த ஒரு கலைஞனின் இழப்பு குறீத்து என்னால் கடந்து செல்ல முடியவில்லை. சென்னைக்கு வந்த புதிதில் ஒரே ஆறுதலாக இருந்தவை. தமிழ் நாடு திரப்பட இயக்கம் பிலிம் சேம்பரில் நடத்தும் திரைபப்ட விழாக்கள்தான். அதில் ஏராளமான மலையாளப்படங்களை காண முடியும் மலையாள சினிமாவின் சிறந்த படங்களுள் சிலவான கடவு, தூரே தூரே ஒரு கூடு கூட்டாம், தனியாவர்தனம், தெய்வத்திண்டே விகுருதிகள், என மலையாள சினிமா அங்கு அறிமுகமானதுதான். தமிழ் சினிமாவை விட மிக உயர்ந்த நிலையில் மலையாள சினிமாவுக்காக மரியாதை என்னிடம் இருந்தது. 2000-
ல் பத்திரிகையில் வேலை கிடைத்து நான் எடுத்த முதல் நேர்காணல் சிபி மலையிலைத்தான்.உண்மையில் நான் நேர்காணல் எடுக்க நினைத்தது லோகிததாஸை அவரை எடுக்க முடியாமல் போக எனக்கு பிடித்த இன்னொரு இயக்குநரான சிபியை நேர்காணல் கண்டேன். சிபியின் சிறந்த படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் லோகிததாஸ்தான். 1987-ல் லோகிததாஸின் கதையில் சிபி இயக்கிய தனியாவர்த்தனமும், எழுதாப்புரங்களும் சிறந்த படைப்புகளாக இருந்தன. அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றார். ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகளில் மலையாள சினிமா மெள்ள மெள்ள தன் மக்கள் மொழியை இழந்து வருகிறது. எம்.டி.வி, பத்மராஜன், லோகிததாஸ், பாசில், சிபி மலையில், அடூர், ஜார்ஜ் ஆகியோருக்குப் பிறகு சொல்லிக் கொள்கிற மாதிரி புதிய தலைமுறை திரைக்கதை ஆசிரியர்கள் வரவ்ல்லை. திலீப் மாதிரியான ஸ்டார்கள் வித விதமான மாசால வித்தைகளை அங்கும் செய்யத் துவங்கிய பிறகு மலையாள சினிமா மீது சலிப்பு வந்தது. கடைசியாக சிபியோ, லோகிததாஸோ எடுத்த எந்தப் படங்களும் சரியாக ஓடவில்லை. (லோகிததாஸ் திலீப்பை வைத்து எடுத்த சூத்திரதாரனும், கஸ்தூரிமானும் நன்றாக ஓடிய படங்கள் என நினைக்கிறேன்.) ஆனால் மலையாள சினிமாவின் இடைவெளியை நிரப்பும் அடுத்த தலைமுறை இயக்குநர்களோ கதாசிரியர்களோ வராத சூழலில் பிள்ஸ்சி மாதிரியான புதிய்வர்கள் நம்பிக்கை அளித்தாலும் கேரள சினிமா தன் உயிர்ப்பை வேகமாக தொலைத்துக் கொண்டிருக்கிறது. லோகிதாதாஸின் அமரம் படம்தான் என்னை மிகவும் அல்லலுற வைத்த படம்
. அது கடலிருந்து எங்கிருந்தோ தன் ஒரு மகளுடன் வருகிற ஒரு மீனவனின் கதை. அவன் மகளிடம் தோற்று விடுகிறான். மகளை டாக்டராக்கிப் பார்க்க விரும்புகிற அரயனின் எல்லா கனவுகளைவும் அவள் சிதைத்து விடுகிறாள். கடைசியின் அரயன் தன்னந்தனியே வந்த வழியே கட்டுமரத்தோடு கடலிலே செல்வதோடு அந்தப் படம் முடியும். பரதனின் இயக்கத்தில் வந்த சிறந்த கடலோர சினிமா அது என நினைக்கிறேன். செம்மீனீல் இருக்கும் பேண்டஸி கூட அமரத்தில் இருக்காது. மீனவர்களின் கோபம், பசி, அன்பு, இரக்கம் எல்லாமே அதில் இருக்கும். இது மாதிரி ஒரு மலையாள சினிமா பார்த்து நீண்ட் வருடங்கள் ஆகிவிட்டது. இந்த இடத்தில்தான் லோகிததாஸின் இழப்பு மலையாள சினிமாக் கதை மரபுக்கு நேர்ந்த இழப்பு என நினைக்கிறேன். அவர்தான் மீராஜாஸ்மினை அறிமுகப்படுத்தினார் ஆனால் மீராஜாஸ்மினோடு அவரை தொடர்பு படுத்திப் பேசினார்கள். இது குறித்து ஒரு முறை ஹைதராபாத்தில் இருந்த மீராஜாஸ்மினிடம் நேர்காண்ட போது அவர் லோகிததாஸை “அச்சன்” என்றார் அதற்கு மேல் அவர் பேசவில்லை. மிகச்சரியான நடிகர்களை தன் கதைக்கு தேர்ந்தெடுத்து சிறந்த முறையில் இயக்குவார். தமிழில் அவர் கஸ்தூரி மான் எடுத்தார். நான் படத்தை வெளியாவதற்கு முன்பே பார்த்தேன் என நினைக்கிறேன். அந்தப் படம் தமிழில் வந்த படங்களில் சிறந்த படங்களுள் ஒன்று ஜெயமோகன் வசனம் எழுதிய முதல் சினிமாவும் அதுதான். அதில் ஜெயமோகனின் வசனம் கதையோடு ஒட்டி நல்ல முறையில் பொறுந்தி இருந்தது. ஆனால் கஸ்தூரிமான் தமிழில் ஓட வில்லை காரணம் அது வெளிவந்த போது சென்னை மழை வெள்ளத்தால் சூழ்ந்து மூன்று நாட்கள் முடங்கீருந்தது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த போது சரியான தியேட்டர் கிடைக்காமல் வெளியானதால் ஓடவில்லை. கொஞ்சம் தாமதமாக சரியான திரையரங்குகளில் வெளியிட்டிருந்தால் மிகச் சிறந்த வெற்றிப்ப்டமாக கஸ்தூரிமான் தமிழின் இருந்திருக்கும். லோகி தொடர்ந்து தமிழின் சினிமா செய்திருப்பார். அந்தப் படம் வெளியான போது நான் நேசித்த அந்தக் கலைஞனையும் ஒரு நேர்காணல் கண்டேன். அது சிறந்த நேர்காணலாக இல்லாவிட்டாலும். ஒரு சந்திப்பு அவளவுதான். அம்பலத்தில் கருணாகரன் என்னும் லோகிததாஸ் என்கிற தென்னிந்திய கலைஞனுக்கு நாம் அஞ்சலி செலுத்துவோம்
.