பொது பல சேனா என்ற பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் தெருவில் சுதந்திரமாக உலாவும் அதே வேளை அமைதியான முறையில் கடையடைப்பு நடத்துமாறு கோரிக்கை விடுத்த முஸ்லிம் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் 5 உறுப்பினர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடையடைப்புப் போராட்ட நாளான 19ம் திகதி ஜூன் மாதம் கொழும்பு மத்திய பகுதியில் கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்குபற்றுமாறு இஸ்லாமிய வர்த்தகர் ஒருவருக்கு விடுத்த அழைப்பின் பின்னர் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலிஸ் கூறுகிறது. மிரட்டல் தொடர்பான புகார் போலியானது என்றும் இஸ்லாமியத் தமிழர்களைக் கைது செய்யும் நோக்குடனேயே போலிப் புகார் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.