இதற்கு காரணமானதாக கருதப்படும் தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் காவற்துறையில் செய்த முறைப்பாடுகள் சம்பந்தமாக காவற்துறையினர் நடவடிக்கை எடுக்காததும் மக்களின் கோபத்திற்கு காரணமாகும். தொழிற்சாலையின் உரிமையாளர் பலமிக்கவர் என்பதால், முறைப்பாடுகள் செய்தும் அவருக்கு எதிராகவோ, தொழிற்சாலைக்கு எதிராகவோ காவற்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், மக்கள் தமது கோரிக்கையை வலியுறுத்தி வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வீதியை மறிந்து ஆர்ப்பாட்டம் செய்த மக்களை நீண்டநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அரசாங்கம் அனுமதித்திருந்தது. நீண்டநேரத்திற்கு பின்னர் ஆர்ப்பாட்டத்தை கலைக்க அரசாங்கம் செயற்படுவதை தவிர்க்க முடியாது என்ற போதிலும் அதற்கு இராணுவத்தை பயன்படுத்தி, இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது பாரிய தவறாகும். இதில் பெரும் குற்றம் இழைக்கப்பட்டுள்ளது என வாசுதேவ நாணயக்கார வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரைக்கும் இனப்படுகொலை அரசில் அமைச்சராக அங்கம் வகித்த இடதுசாரி முகமூடி போட்ட வாசுதேவ நாணயக்கார இனிமேலாவது பதவி விலகுவாரா? அப்பாவிப் பொதுமக்கள் மீதல்லவ்வா தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இடதுசாரியத்திபெயரால் பாசிஸ்டுக்களோடு ஒட்டிக்கொள்ளும் வாசுதேவ போன்ற போலிகள் இந்த சமூகத்தின் சாபக்கேடுகள்.