Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மக்காவுக்கு புனித யாத்திரை : நீதிமன்றத்திற்கு தப்பியோட்டம்?

எதிர்வரும் 6 ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டிய அமைச்சர் ரிசாத் பதியுதீன், மக்காவுக்கு புனித யாத்திரை சென்றிருப்பதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மன்னார் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பது என வடக்கில் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் சட்டத்தரணிகள் தீர்மானித்தனர். இதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களின் பணிகள் எதிர்வரும் 2 ஆம் திகதியே ஆரம்பிக்கப்படவுள்ளன.

தாம் இரண்டு பிரதான கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக வட பிராந்திய சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் முதலாவது, அமைச்சர் ரிசாத் பதியூதீன் எதிர்வரும் 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.

இரண்டாவது மன்னார் நீதிமன்றத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய நபரை, சட்டத்தரணிகள் அடையாளம் கண்டுள்ளனர். எனினும், அவரை காவல்துறையினர் இதுவரை கைதுசெய்யவில்லை. இவர் உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டும் என சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
இதனிடையே வழக்கு விசாரணைகளுக்காக நேற்று பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நீதிமன்றங்களுக்கு சென்றிருந்தனர்.

எனினும், அவர்கள் தொடர்பான வழக்குகள் அனைத்து, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

எதிர்வரும் 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டிய அமைச்சர் ரிசாத் பதியுதீன், புனித மக்காவுக்கு யாத்திரை சென்றிருப்பதால், சட்டத்தரணிகள் இது சம்பந்தமாக கலந்துரையாடி வருகின்றனர்.

Exit mobile version