இதே வேளை இந்திய அரசின் அழைப்பினை ஏற்று கடந்த வருடம் மகிந்த ராஜபக்சவுடன் சென்னை சென்றிருந்தார்.
சென்னையில் வழக்கறிஞர்கள் தேவானந்தா மீதான வழக்கைத் தள்ளுபடி செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனது பெயரை தேடப்படுவோர் பட்டியலிலிருந்து நீக்கக் கோரியும், முன்ஜாமீன் அளிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் டக்ளஸ். இந்த இரு கோரிக்கைகளையும் இன்று உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
உரிய நீதிமன்றத்தில் டக்ளஸ் நேரில் ஆஜராகி முன்ஜாமீன் பெறலாம். அவரது பெயரை தேடப்படுவோர் பட்டியலிலிருந்து அதுவரை நீக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறி விட்டது.