17.09.2008.
மும்பை:
அமெரிக்காவில் திவா லாகிப் போனதாக அறி விக்கப்பட்டுள்ள லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தின் இந் தியக் கிளைகளில் பணியாற் றும் 2 ஆயிரத்து 500 பேரின் நிலைமை கேள்விக்குறி யாகி உள்ளது.
சுமார் 24 லட்சம் கோடி ரூபாயை நிதி நிறுவனங்க ளுக்கும், வாடிக்கையாளர் களுக்கும் அளிக்க வேண் டிய நிலையில், அதைத் தர இயலாத நிலையில் இருப்ப தால் திவாலாகிப் போன தாக லேமன் பிரதர்ஸ் நிறுவ னம் அறிவித்தது. இதில் அமெரிக்காவில் உள்ள துணை நிறுவனங்களையோ அல்லது இந்தியா மற்றும் பிற நாடுகளில் இயங்கி வரும் கிளைகளையோ சேர்க்கவில்லை.
லேமன் பிரதர்ஸ் நிறுவ னத்தின் கிளையும், அதன் சார்பில் பிபிஓ நிறுவனம் ஒன்றும் இந்தியாவில் இயங்கி வருகின்றன. இந்த இரண்டிலும் சேர்த்து 2 ஆயிரத்து 500 பேர் பணி யாற்றுகின்றனர். நிறுவனம் திவால் ஆனது குறித்து இந்தியக்கிளையின் நிர்வாகி கள் செய்தியாளர்களிடம் எது வும் கூற மறுத்து விட்டனர்.
பிரிட்டனில் லேமன் பி ரதர்ஸ் நிறுவனத்தில் பணி யாற்றி வந்த 5 ஆயிரம் பேர் தங்கள் வேலையை இழந் துள்ளனர்.