Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமெ. உடன்பாட்டை தன்மானமுள்ள இந்தியர்கள் ஏற்கமாட்டார்கள் : உ.வாசுகி

இந்தியாவை அமெரிக் காவிற்கு அடிபணியச் செய் யும் ஆட்சியாளர்களை தன் மானமுள்ள இந்தியர்கள் ஏற்க முடியுமா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப் பினர் உ.வாசுகி கேள்வி எழுப்பினார்.

திருப்பூர் அரிசிக் கடை வீதியில் ஞாயிற்றுக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து மத்திய அரசின் அணு சக்தி ஒப்பந் தம் மற்றும் விலைவாசி உயர்வை எதிர்த்து கண்ட னப் பொதுக் கூட்டம் நடத் தின. இக் கூட்டத்தில் சிறப் புரை ஆற்றிய உ.வாசுகி கூறியதாவது:

அமெரிக்காவுடன் கேந்திர உறவு வைத்துக் கொண்டால்தான் என்ன என்று சிலர் கேட்கலாம். சமீபத்தில் இரு நாடுகளின் தொழில்துறை தலைவர்கள் சந்தித்துப் பேசி 31 பரிந் துரைகளை முடிவு செய்துள்ளனர். அதில் நான்கு மட்டுமே அமெரிக்கா இந்தியாவுக்குத் தரும் விச யங்கள். மற்ற 27 பரிந்துரை களும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு தரும் அம்சங்கள்தான் உள்ளன.

வகுப்புவாத எதிர்ப் பிலும் காங்கிரஸ் உறுதியாக இல்லை. வகுப்புவாத வன் முறைக்கு எதிராக சட்டம் கொண்டு வரச் சொல்லி நான்கு ஆண்டுகள் ஆகியும் அவர்கள் கொண்டுவர வில்லை. வகுப்புவாத சக்தி களுடன் சமரசம் செய்வதன் மூலம் அவர்களை தனி மைப்படுத்த முடியாது. அவர்களை எதிர்த்துப் போராடுவதன் மூலம்தான் வகுப்புவாதத்தை தோற் கடிக்க முடியும்.

நான்காண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவளித்த இடதுசாரி கள் நிர்ப்பந்தம் செய்ததன் பலனாகத்தான் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நிறு வனங்கள் வராமல் தடுக்கப் பட்டது. ஆண்டுக்கு நூறு நாள் வேலை தரும் கிராமப் புற வேலை உறுதிச் சட்டம், மலைவாழ் மக்களைப் பாது காக்கும் வனப் பாதுகாப்புச் சட்டம், தகவல் பெறும் உரிமைச் சட்டம், குடும்ப வன்முறைத் தடுப்புச் சட் டம் போன்றவை கொண்டு வரப்பட்டது. ஆனால் தற் போது மக்கள் விரோதக் கொள்கைகளை பட்டியல் போட்டு ஒவ்வொன்றாக அமல்படுத்தத் துடிக்கின்றனர்.

ஆட்சியில் நீடிக்க எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கும் அவமானகர மான நிலையில் காங்கிரஸ் இருக்கிறது. எனவேதான் காங்கிரஸூம் வேண்டாம், பாரதிய ஜனதாவும் வேண் டாம். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, விவசாயத்தை பாதுகாக்கும் கொள்கை, அணுசக்தி ஒப்பந்த எதிர்ப்பு, வகுப்பு வாதத்தை தனிமைப்படுத் துவது, சிபிஐ போன்ற அமைப்புகளை அரசியல் நோக்கத்துடன் தவறாக பயன்படுத்துவதை எதிர்ப்பது ஆகிய ஐந்து அம்சக் கோரிக் கைகள் அடிப்படையில் இடதுசாரிகள் உள்ளடக்கிய பத்து கட்சிகள் கூட்டு இயக் கத்தை தொடங்குகின்றன என்றார்.

கே.சுப்பராயன் எம்.பி.

கடந்த 17 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் இருந்த வர்கள் காங்கிரஸாக இருந் தாலும், பிஜேபியாக இருந் தாலும் அவர்கள் பின்பற்றிய தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கைகளால் தான் இந்திய தொழில், விவ சாயம் நலிவடைந்து அந்நிய நாட்டுப் பொருட்கள் நம் சந்தையைக் கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தவறான கொள்கை களால் 535 குடும்பங்களின் சொத்து மதிப்பு 12 லட்சத்து 35 ஆயிரத்து 132 கோடி ரூபாயாக பெருக்கெடுத் துள்ளது. அதே சமயம் நம் நாட்டின் 88 கோடி மக்கள் நாளொன்றுக்கு ஏழு ரூபாயில் இருந்து 20 ரூபாய் மட்டுமே கிடைக்கக்கூடிய அவல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலைமைக்கு மாற்றம் காண பாரம்பரியப் பெருமையோடும், கீர்த்தி யோடும் கம்யூனிஸ்டுகள் முன்வருகிறோம் என்று கூறினார்.

Exit mobile version